தொழில்நுட்பம்

சாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் விற்பனை அதிரடி நிறுத்தம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவில் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் விலை ரூ. 69,999 என துவங்குகிறது.புதிய பிளாக்ஷிப் சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனையை சாம்சங் அவசர அவசரமாக நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

ALSO READ  கொரானாவால் நின்று போன "மிஷன் இம்பாசிபிள்"…!

கேலக்ஸி எஸ்20, எஸ்20 பிளஸ் மற்றும் எஸ்20 அல்ட்ரா போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்று தீர்ந்துவிட்டதாக சாம்சங் இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் சீனாவுக்கான அதிகாரப்பூர்வ வலைதளங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.பழைய கேலக்ஸி எஸ் சீரிஸ் மாடல்களை குறைந்த விலையில் வாங்க திட்டமிட்டு இருந்தவர்களுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரப்பூர்வ தளத்தில் விற்று தீர்ந்த போதும், மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட கேலக்ஸி எஸ்20 சீரிஸ் யூனிட்களை விற்பனை செய்யலாம்.

தற்சமயம் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடல் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு சில மாதங்களே நிறைவுற்று இருப்பதால் இதன் விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மொபைல் போனில் நம் ரகசியங்களை பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்:

naveen santhakumar

ஜியோவின் அதிரடி போஸ்ட்பெய்டு சலுகை :

Shobika

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் விளம்பர வசதி :

Shobika