தொழில்நுட்பம்

சாம்சங் 5G ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியீடு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M 51 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. தற்போது கேலக்ஸி M 52 ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் சாம்சங் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது 5 G ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Samsung Galaxy Note20+ 5G | சேம்சங் கேலக்ஸி Note20+ 5G இந்தியாவின் விலை ,  முழு சிறப்பம்சம் - 19th June 2021 | டிஜிட்

புதிய சாம்சங் எம் சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 778 5G பிராசஸர் வழங்கப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் எந்த ஸ்மார்ட்போனிலும் இதுவரை இந்த பிராசஸர் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஹானர் 50 சீரிஸ் மாடல்களில் இந்த பிராசஸர் முதல்முறையாக வழங்கப்பட்டது.

Samsung Galaxy S10 5G Expected Price, Full Specs & Release Date (30th Jun  2021) at Gadgets Now

பின் ரியல்மி, ஐகூ, மோட்டோரோலா, ஒப்போ மற்றும் சியோமி என பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களிலும் ஸ்னாப்டிராகன் 778 5G பிராசஸர் வழங்கப்பட இருப்பதாக அந்தந்த நிறுவனங்கள் அறிவித்து இருக்கின்றன.

ALSO READ  இனிமே..உங்க இஷ்டத்துக்கு மொபைல மடிக்கலாம்...சாம்சங் நிறுவனத்தின் அசத்தல் மொபைல்:

முந்தைய தகவல்களின்படி புது சாம்சங் ஸ்மார்ட்போன் 64 MB பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இத்துடன் 12 MB அல்ட்ரா வைடு லென்ஸ், 5 MB மேக்ரோ கேமரா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேலக்ஸி M 51 மாடலை போன்றே புதிய M 52 5G மாடலிலும் 32 MB செல்பி கேமரா வழங்கப்படலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்ஸ்..!

naveen santhakumar

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் விலையில் மாற்றம் :

Shobika

ஜியோ மூக்குக் கண்ணாடி விரைவில் அறிமுகம்- ஜியோ கிளாஸ் என்றால் என்ன? எப்படி வேலை செய்யும்? 

naveen santhakumar