தொழில்நுட்பம்

விரைவில் வெளியாகும் டாடா Altroz கார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விரைவில் வெளியாகும் டாடா Altroz கார்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து, வாடிக்கையாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் ஒரு தயாரிப்பு Altroz. இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். டாடா Altroz பிரீமியம் ஹேட்ச்பேக் கார், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில்தான் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது.

டாடா Altroz கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது சமீப காலமாக பல முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. பெரும் ஆவலை தூண்டியுள்ள Altroz கார் சமீபத்தில் நிறைவடைந்த தீபாவளி பண்டிகை சமயத்தில் டாடா ஷோரூம்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அது நடக்கவில்லை.

ALSO READ  xiaomi நிறுவனத்தின் மின்சார பைக் அறிமுகம்

தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் Altroz கார் குறித்த புதிய வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதன் மூலம் டாடா Altroz அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது 2020ம் ஆண்டின் ஜனவரி மாதம் டாடா Altroz கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. டாடா நிறுவனம் ஆரம்பத்தில் பிஎஸ்-4 இன்ஜின்களுடன் மட்டுமே Altroz காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்திருந்தது. ஆனால் தற்போது பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்கும் வகையிலான இன்ஜின்களுடன் Altroz களமிறக்க டாடா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராயபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க்கில் புகுந்த கார்

Admin

வென்டிலேட்டர்களை தயாரிக்க முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களை அணுகிய மத்திய அரசு….

naveen santhakumar

நாட்டிற்கு வறுமையிலும் பெருமை சேர்த்த மைசூர் பிரதாப்.

naveen santhakumar