தொழில்நுட்பம்

வாட்ஸ் ஆப் கொடுத்த புதிய அப்டேட்; மகிழ்ச்சியில் பயனர்கள் !

உலகின் அதிக பயனர்கள் வாட்ஸ் ஆப் செயலியை தங்களின் தொலைத்தொடர்புக்காக பயன்படுத்தி வருகின்றனர்.  கிட்டத்தட்ட இரண்டு பில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிறுவனம் அவ்வப்போது புதிய புதிய அப்டேட்களை அளித்து பயனர்களின் கவனத்தை வேறு பக்கம் திரும்பாமல் பார்த்துக்கொள்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய அப்டேட்டை வெளியிடவுள்ளது வாட்சப் நிறுவனம். 

அது வீடியோக்களை ஒருவருக்கு அனுப்பும் போது மியூட் செய்து அனுப்பும் வசதியை அந்நிறுவனம் சோதனை முறையில் கொண்டு வந்துள்ளது. மற்ற அனைத்து ஆப்ஷன்களும் எப்போதும் போல்தான் இருக்கிறது. வீடியோவை மியூட் செய்வதற்கு Volume போன்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பீட்டா வெர்சன்களில் சோதனை முறையில் இந்த அப்டேட்டை கொண்டு வந்துள்ளது வாட்ஸ் அப். அதுமட்டுமின்றி எமோஜி வைப்பது, டெக்ஸ்ட் வைப்பது, எடிட் செய்யும் ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இது குறைகள் இன்றி வெற்றிபெறும் பட்சத்தில் விரைவில் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. தற்போது இந்த அறிவிப்பால் பயனர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Related posts

ஸ்மார்ட்போன்கள் இதைவிட கேவலமானதா? … அதிர்ச்சி தகவல்

Admin

ஜியோவை விட அசத்தலான திட்டத்தை அறிமுகப்படுத்திய பிஎஸ்என்எல்

Admin

ஆன்லைன் திருட்டுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள “இரு மின்னஞ்சல்களை” பயன்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தல்:

naveen santhakumar