தொழில்நுட்பம்

வெரிஃபிகேஷனை தொடங்கியது ட்விட்டர் வலைதளம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ட்விட்டர் சமூக வலைதள சேவையில் மீண்டும் வெரிஃபிகேஷன் துவங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர பயன்பாட்டில் இல்லாத, முழுமை பெறாத ட்விட்டர் கணக்குகளின் வெரிபிகேஷனை நீக்கவும் அந்நிறுவனம் தொடங்கி உள்ளது.ட்விட்டரில் வெரிஃபிகேஷன் பெறுவதற்கான விதிமுறைகளில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இவை பயனர்கள் வழங்கிய கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ALSO READ  இணையத்தில் லீக் ஆன ரியல்மி பேட் :

அதன்படி இனிமேல், ட்விட்டரில் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் ஃபாளோவர்கள்(FOLLOWERS ) எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வெரிஃ பிகேஷன் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக இது குறிப்பிட்ட நாட்டில் உள்ள ஃபாளோவர்கள் எண்ணிக்கையை கொண்டு வழங்கப்பட்டு வந்தது.இத்துடன் வெரிஃபிகேஷன் வழங்க முன்பை விட அதிக பிரிவுகளை சேர்க்க ட்விட்டர் திட்டமிட்டுள்ளது. அதன்படி கல்வி, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மத தலைவர்கள் உள்ளிட்ட பிரிவுகள் சேர்க்கப்பட இருக்கின்றன.

தற்சமயம் இந்த பிரிவுகளை சேர்ந்தவர்கள் ட்விட்டரில் ஆர்வலர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இதர பிரிவுகளை தேர்வு செய்து வெரிஃபிகேஷனுக்கு விண்ணப்பிக்கலாம். ட்விட்டர் வலைதளம் அல்லது செயலியின் அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில் இருக்கும் ‘Request Verification’ ஆப்ஷனை க்ளிக் செய்து, தேவையான ஆவணங்களை சமர்பித்து வெரிஃபிகேஷனுக்கு விண்ணபிக்க முடியும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அறிமுகமானது சோனி நிறுவனத்தின் புதிய 5G மொபைல்….

naveen santhakumar

பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கிய ட்விட்டர்

Admin

கூடிய விரைவில் இந்தியாவில் ஜியோவின் அதிரடி அறிமுகங்கள்……

Shobika