சுற்றுலா

இந்திய கோவில்களும் அதில் ஒளிந்திருக்கும் அறிவியலும் உங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தியாவில், கோவில்கள் அனைத்தும் கடவுளுக்கும் மனிதனுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். பழமையான கோயில்கள் அனைத்தும் கலை நுணுக்கத்தோடு மட்டுமல்லாமல் அறிவியல் சார்ந்து அமைக்கப்பட்டிருக்கும்.

கோவில்களில் இருக்கக்கூடிய ஒவ்வொறு சிலைகளின் அளவு துவங்கி அதன் கருவறை அமைப்பு மற்றும் கோயில் நோக்கியுள்ள திசை என்று எல்லாவற்றிலுமே அறிவியல் கலந்திருக்கிறது. கோயில் கட்டிடக்கலை என்பது மிக உயர்ந்த அறிவு சார்ந்த கலையாகும். இந்தியாவில் உள்ள கோவில்களுக்கு என்று ஒரு அறிவியல் தன்மை உள்ளது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த கோயில்களில் அறிவியல் தன்மையை நாம் அறிந்து கொள்ள தவறி விட்டோம்.

கோவில் என்பது பஞ்ச பூதங்கள் கலந்த ஒரு பிரபஞ்சத்தின் உருவாக்கம். இந்த கோயில்கள் என்பது வழிபாட்டு ஸ்தலமாக மட்டும் இல்லாமல் நம் சக்தி நிலையை உயர்த்துவதற்கு ஏற்றதாகவும் அமைந்திருக்கிறது. சில கோயில்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக கட்டப்பட்டிருக்கும்.

ALSO READ  மாமல்லபுரத்துக்கு சுற்றுலா செல்ல நாளை முதல் தடை

இந்திய கோயிலுக்குள் நாம் நுழையும் போது ஒரு விஷயத்தை கவனிக்க முடியும். கர்ப்ப கிரகத்தில் இருக்கும் மூல தேவதையை சென்று அடைவதற்கு முன்னால், வழியில் ஏராளமான விஷயங்களை நம்மால் காண முடியும். அவற்றை கண்டு, கடந்த பின்பு தான் நாம் மூல விக்ரகத்துக்கு அருகில் செல்ல முடியும்.

ஒரு கோயில் கட்டுவது சாதாரணமான விஷயமல்ல. இதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரிய அறிவியல் இருக்கிறது. கோயில்கள் அமைகின்ற இடம் காந்த அலைகளால் கடுமையாக இருக்கின்ற இடத்தில் தான் அமைய வேண்டும் என்கிற விதி இருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் இருக்கிற பண்டைய கோயில்கள் அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்கள் இந்த காந்த களம் அடர்த்தியாக உள்ள இடத்திலேயே அமைந்திருக்கிறது.

ALSO READ  ராயபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க்கில் புகுந்த கார்

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்த விஞ்ஞான கருவியும் இல்லாத காலங்களில் எப்படி இதைக் கண்டு பிடித்தார்கள் என்பது ஆச்சரியமே!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கும்பாபிஷேகத்திற்கு தயாரானது தஞ்சை நகரம்.

naveen santhakumar

இந்திய பைக் வீக் திருவிழா தொடக்கம்

Admin

மனதை மயக்கும் மேகமலை.. கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படங்கள்..

News Editor