சுற்றுலா தமிழகம்

கும்பாபிஷேகத்திற்கு தயாரானது தஞ்சை நகரம்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் வரும் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும்  தயார் நிலையில் உள்ளது.

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு “Namma Thanjai” என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நகரில் “May I Help You” பூத்துகள் 17 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 11 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.15 ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஐந்து பைக் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது.

இப்பணியில் 1500 சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை நகரில் 238 இடங்களில் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.குடிநீர் மற்றும் மற்ற தேவைகளுக்காக 225 இடங்களில் 1000 லிட்டர் வாட்டர் டேங்க்குகள் அமைக்கப்பட்டுள்ளது.எட்டு சூப்பிரண்டுகள் தலைமையில் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்  பாதுகாப்பு பணிக்காக 196 இடங்களில் சிசிடிவிகள் அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களிலிருந்து தஞ்சை நகருக்கு மக்கள் வருவதற்காக 50 சிறப்பு பேருந்துகளும் 200 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.15 பேட்டரி வாகனங்கள்,300 வீல் சேர்கள் மற்றும் 175 Shuttle service வாகன சேவை வசதி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  ரஜினிகாந்த் வீடியோவை அதிரடியாக நீக்கிய ட்விட்டர் நிறுவனம்...

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பாரம்பரியம் மற்றும் பண்பாடு சுற்றுலா பேக்கேஜ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

1010 ஆம் ஆண்டு தஞ்சை பெரிய கோயிலில் கட்டப்பட்டது. அப்பொழுது முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 1729, 1843, 1980, 1997 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.எனவே பிப்ரவரி 1 முதல் 5 தேதிகளில் 10 லட்சம் பக்தர்கள் வரை கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்னாள் நீதிபதி கர்ணன் கைது:

naveen santhakumar

கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு; எதற்கெல்லாம் தடை, அனுமதி?

naveen santhakumar

தண்ணீரில் குழந்தையை அமுக்கி கொலை செய்த தாய் கைது

News Editor