தமிழ்நாடு அரசு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த ஆராய்ச்சி செய்து வருகிறது அந்தவகையில் கேரவன் டூரிஸம் என்ற புதிய சுற்றுலா திட்டத்தை அமல்படுத்தலாம் என்ற முடிவை செய்துள்ளது
கேரவன் டூரிஸம் என்பது கடல் மலை காடு என இயற்கையோடு ஒன்றிணைந்து தங்க விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு கட்டில் மெத்தை சமையலறை கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கூடிய வாகனம் உருவாக்கப்படும் இதன் மூலம் சுற்றுலா பயணிகள் அதிகம் வரத் தொடங்குவார்கள் என்ற நிலை உள்ளது .
இதுபோன்ற கேரவன் டூரிசம் என்பது வெளிநாடுகளில் தான் பிரபலமாக உள்ளது இந்தியாவில் கர்நாடக மாநிலம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டுமே கேரவன் டூரிசம் அமலில் உள்ளது தமிழ்நாட்டில் இதை அறிமுகப்படுத்துவது சுற்றுலாத்துறை புதிய வளர்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளார்கள்.