இந்தியா சுற்றுலா தமிழகம்

கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி. தமிழக அரசு அரசாணை வெளியீடு.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிதம்பரம், அருள்மிகு சபாநாயகர் நடராஜர் திருக்கோயிலில் பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்று கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருவதால் இத்திருக்கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பாகும். மேலும் அருள்மிகு சபாநாயகர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர இரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்துது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு வந்தது.

ALSO READ  கோயம்புத்தூர் தினம்

இதனையடுத்து கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்பட்டு அனைத்து திருக்கோயில்களிலும் ஏற்கனவே இருந்த வழிபாட்டு நடைமுறைகள் மீண்டும் தொடரும் நிலையில், இத்திருக்கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் கனகசபை மண்டபத்தின் மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றயதாக பக்தர்கள் தரப்பில் பெரும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கடலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆகியோரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆகம விதிகளை பின்பற்றி பக்தர்கள் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.S.அழகிரிக்கு கொரோனா:

naveen santhakumar

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கிய போத்தீஸ் பட்டு நிறுவனம்…! 

naveen santhakumar

இளம்பெண்ணை கன்னத்தில் அறைந்த போலீஸ் அதிகாரி: முதல்வர் கடும் கண்டனம்!… 

naveen santhakumar