உலகம் சுற்றுலா

வளமையின் சின்னமாக ஆண் குறி ஓவியம்.. எந்த நாடு தெரியுமா???

திம்பு:-

பூட்டான் இந்தியாவின் வடக்கே சீனாவை ஒட்டி அமைந்துள்ள மிகச் சிறிய தேசமாகும். இந்த தேசத்தில் ஒரு விசித்திரமான பழக்கத்தை இம்மக்கள் பின்பற்றி வருகிறார்கள். அதாவது அவர்கள் வீடுகளில் முழுவதும் ஆண்குறிகளின் ஓவியங்களை கொண்டு அலங்கரித்து வைத்துள்ளார்கள்.

உலகம் முழுவதும் பல்வேறு விதமான கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் மற்றும் பல்வேறு வித நம்பிக்கைகளை மக்கள் பின்பற்றி வருகிறனர். இதில் குறிப்பிடத்தக்க நம்பிக்கையாக பூட்டான் நாட்களில் இந்த ஆண்குறி வழிபாடு பார்க்கப்படுகிறது.

உலகின் மிக மகிழ்ச்சிகரமான நாடு என்று பூட்டான் அழைக்கப்படுகிறது. முதன்முதலாக மகிழ்ச்சிக்கான குறியீட்டை அறிமுகப்படுத்திய நாடு பூட்டான் தான். பூட்டான் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு ரம்மியமான தேசம். தன் இயற்கை வளங்கள் காரணமாக “ஆசியாவின் சுவிட்சர்லாந்து” என்று அழைக்கப்படுகிறது.

பூட்டான் முழுக்க முழுக்க ஒரு புத்த மதத்தை பின்பற்றும் தேசமாகும். இங்கு நிறையவே புத்த விகாரங்கள் அமைந்துள்ளன. பூட்டான் தேசம் தனது நாட்டில் சுற்றுலா பயணிகளுக்காக 1974-ஆம் ஆண்டு தான் திறந்து விட்டது. குறைந்த செலவில் சுற்றுலா செல்வதற்கு மிகவும் ஏற்ற நாடு பூட்டான்.

பூட்டானில் எந்தப் பக்கம் திரும்பினாலும் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் மக்கள் விறைப்பு நிலையில் உள்ள ஆண் குறி (Phalluses) கொண்டு அலங்கரித்து வைத்துள்ளார்கள்.

இதுகுறித்து அந்த மக்கள் கூறுகையில்:-

இந்த ஆண்குறி சின்னம் எங்களை தீய சக்திகளிடம் இருந்தும் பிற தீய விஷயங்கள் இடம் இருந்தும் எங்களை காப்பாற்றுவதாக நாங்கள் ஆழமாக நம்புகிறோம். மேலும், இது எங்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கிறது என்கிறார்கள்.

இந்த ஆண்குறி வழிபாட்டு முறை பூட்டானில் 15-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாக தெரிகிறது ன. அவர்கள் ஆண்குறியை வளமையின் சின்னமாக வழிபடுகிறார்கள். இன்று அது அவர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றி விட்டது.

Related posts

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழர்.. கெத்து காட்டிய மதுரை..

Admin

உலக அன்னையர் தினம்.. அன்னைக்கு செய்யவேண்டியவை..

naveen santhakumar

கொரோனா வைரஸை குணப்படுத்த உலக சுகாதார நிறுவனம் (WHO) நான்கு முக்கிய மருந்துகளை சோதனை செய்கிறது…..

naveen santhakumar