இந்தியா சுற்றுலா லைஃப் ஸ்டைல்

நீங்கள் பயணத்தை விரும்புகிறவர்களா? இந்தியாவின் நீண்ட ரயில் பயணங்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நீங்கள் பயணத்தை விரும்புகிறவர்களா? – இது தான் இந்தியாவின் நீண்ட ரயில் பயணங்கள்

இந்தியாவின் பரப்பளவில் 1,15,000 கி.மீ பரப்பளவை இணைக்கும் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க் ரயில்வே துறை. நிறைய பேருக்கு ரயிலில் பயணம் செய்ய பிடிக்கும். காரணம் பஸ் போகாத ஊருக்குள் கூட சில சமயம் ரயில் போகும். உடன் பயணிக்கும் பயணிகள், வியாபாரிகள், என அந்த பயண உலகமே தனி தான். ஆனால் ஒவ்வொரு முறையும் ரயிலில் நாம் செல்லும் இடத்தை அடைந்தால் இன்னும் ரொம்ப தூரம் போயிருக்கலாமோ என்ற எண்ணம் நமக்குள் வரும். அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த குறிப்புகள். இந்தியாவின் மிக நீண்ட ரயில் வழி பயணங்கள் என்னென்ன தெரியுமா?

விவேக் எக்ஸ்பிரஸ் (திப்ருகார் முதல் கன்னியாகுமரி வரை):

இந்த பட்டியலில் முதலிடம் வகிப்பது விவேக் எக்ஸ்பிரஸ் தான். திப்ருகார் முதல் கன்னியாகுமரி வரை வாராந்திர அடிப்படையில் இயங்கும் இந்த ரயில் பயணகாலம் 5 நாட்கள். இந்தியாவில் மிக நீண்ட ரயில் பயண பாதையாகவும், உலகின் 24 வது ரயிலாகவும் உள்ளது விவேக் எக்ஸ்பிரஸ். சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த பயணம் சுமார் 80 மணி நேரத்தில் 4273 கி.மீ தூரத்தை 57 இடைநிலை நிறுத்தங்களை கொண்டுள்ளது.

திருவனந்தபுரம் – சில்சார் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்:

ALSO READ  பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை பள்ளி மாணவர்கள் காண்பதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

திருவனந்தபுரம் – சில்சார் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில், இது முன்பு திருவனந்தபுரம் சென்ட்ரல் – குவஹாத்தி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்டது. ஆனால் ரயில் பாதை விரிவாக்கத்திற்கு பின்னர் அது திருவனந்தபுரம் – சில்சார் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸாக அழைக்கப்பட்டது. இந்த ரயில் 3932 கி.மீ தூரத்தை 76 மணி 35 நிமிடங்களில் 54 நிறுத்தங்களுடன் கொண்டுள்ளது. இதன் பயண காலம் 4 நாட்கள் ஆகும்.

ஹிம்ஸாகர் எக்ஸ்பிரஸ் (கன்னியாகுமரி முதல் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா):

ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா மற்றும் கன்னியாகுமரி இடையே இயங்கும் ஹிம்ஸாகர் எக்ஸ்பிரஸ் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வாராந்திர ரயில் 12 இந்திய மாநிலங்களை கடந்து, 73 நிலையங்களில் நிறுத்தி, சுமார் 73 மணி நேரத்தில் 3785 கி.மீ தூரத்தை கடக்கிறது. ஜம்மு-காஷ்மீர், கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவியின் புகழ்பெற்ற ஆலயத்தை பார்வையிட விரும்பும் தெற்கில் வசிக்கும் பக்தர்களால் இந்த ரயில் விரும்பப்படுகிறது.

நேவியுக் எக்ஸ்பிரஸ் (மங்களூர் சென்ட்ரல் முதல் ஜம்மு தாவி வரை)

மங்களூர் சென்ட்ரலில் இருந்து ஜம்மு தாவி வரை நேவியுக் எக்ஸ்பிரஸ் ஜம்முவை அடைய 4 நாட்கள் ஆகும். இந்த 4 நாட்களில், இந்த ரயில் 59 நிலையங்களில் நிறுத்தப்பட்டு 3685 கி.மீ தூரத்தில் பயணிக்கிறது. 15 இந்திய மாநிலங்கள் வழியாக செல்லும் நாட்டின் ஒரே ரயிலாகும். இந்த ரயிலை அறிமுகப்படுத்தியதன் முக்கிய நோக்கம் ஜம்மு-காஷ்மீரின் பிற இந்திய மாநிலங்களுடன் இணைப்பை மேம்படுத்துவதாகும்.

ALSO READ  நோட்டுக்கு அட்டை போடமாட்டியா ? மாற்றுத்திறனாளி சிறுவனை water tank-ல் தூக்கி போட்ட டீச்சர்

ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் (திருநெல்வேலி முதல் ஜம்மு வரை)

ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் தமிழ்நாட்டின் தென்மாவட்டமான திருநெல்வேலியில் இருந்து வாரத்திற்கு இரண்டு முறை ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ராவுக்கு (ஜம்மு & காஷ்மீர்) செல்கிறது. இந்த ரயில் சுமார் 3642 கி.மீ தூரத்தை உள்ளடக்கியது மற்றும் 62 ரயில் நிறுத்தங்களை கொண்டுள்ளது.

அமிர்தசரஸ் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் (அமிர்தசரஸ் முதல் கொச்சுவேலி திருவனந்தபுரம்)

அமிர்தசரஸ் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாராந்திர ரயிலாக இயக்கப்படும் இந்த ரயில், ஏழு மாநிலங்கள் வழியாக பயணித்து 3597 கி.மீ தூரத்தை அடைய கிட்டத்தட்ட 57 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. வழியில் ரயில் 25 நிலையங்களில் மட்டுமே நிற்கிறது. அழகிய பொற்கோயிலை பார்க்க விரும்புவோருக்கு இந்த ரயில் மிகவும் பிடித்தது.

ஹம்ஸஃபர் எக்ஸ்பிரஸ் (அகர்தலா முதல் பெங்களூரு கன்டோன்மென்ட் வரை)

அகர்தலா மற்றும் பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே இயங்கும் ஹம்ஸாபர் எக்ஸ்பிரஸ் 64 மணி 15 நிமிடங்களில் 3570 கி.மீ தூரத்தை பயணத்தில். இடையில் 28 நிலையங்களில் மட்டுமே நிறுத்தப்படுகிறது. ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் அகர்தலாவிலிருந்து பெங்களூரு கன்டோன்மென்ட்டுக்கு வாரத்திற்கு இரண்டு முறை புறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முடிவிற்கு வந்த 65 வருட சகாப்தம்- மூடப்பட்டது விட்கோ நிறுவனம்…! 

naveen santhakumar

கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டி நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக்கிய இளைஞர்….

naveen santhakumar

திருமலையின் பசுமைத்தன்மையை பராமரிக்க சில வாகனங்களுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது:

naveen santhakumar