சுற்றுலா தமிழகம்

சுற்றுலா பயணிகள் குற்றால அருவியில் குளிக்க தடை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் உள்ள குற்றால அருவிகளில் தென்மேற்கு பருவ மழை காரணமாக பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுவதால் அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் குற்றால அருவிகள் அமைந்துள்ளது. குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன் மாதங்களாகும். தற்போது தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கி உள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையின் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து துவங்கி சீசன் ஆரம்பமாகியுள்ளது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம் சிற்றருவி ,புலியருவி உள்ளிட்டவற்றில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.இந்நிலையில் நேற்று மாலை முதல் குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த சாரல் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து பாதுகாப்பு வளைவை தாண்டி அருவிகளில் தண்ணீர் விழுந்ததால் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்தனர்.


Share
ALSO READ  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மார்ச் 1 முதல் வீடுகளுக்கு மின் இணைப்பு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்- மின்சார வாரியம்….

naveen santhakumar

சுதந்திர போராட்ட வீரர் என். சங்கரைய்யா 100 வயது ; அரசு விழாவாக கொண்டாட வேண்டும் ….

News Editor

இன்று முதல் மீண்டும் மஞ்சப்பை… முதல்வர் தொடங்கிவைத்தார்!

naveen santhakumar