சுற்றுலா

தமிழகத்தில் கம்பர் கோவில் எங்கிருக்கிறது தெரியுமா???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

கம்பரை நினைவு கூறுவோம்

‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்பார்கள்.

கம்பர் இயற்றிய கம்ப ராமாயணத்தில் காதல் தமிழ், வீரத் தமிழ், ஆன்மிகத் தமிழ் என அனைத்தையும் ஓரு சேர தந்தவர்.

இந்த தெய்வீக புலவரின் நினைவிடம் நாட்டரசன்கோட்டை அருகேயுள்ள கருதுப்பட்டி என்ற கிராமத்தில்தான் அமைந்துள்ளது.

அதனால்தான் இன்றும் இந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு கம்பர் சமாதி உள்ள இடத்திலிருந்து மண் எடுத்து குழந்தையின் நாக்கில் வைப்பது வழக்கமாக உள்ளது.

அப்படிச் செய்வதால், குழந்தை நல்ல தமிழாற்றலோடும், மிகுந்த தமிழ் அறிவுடனும் வளரும் என்பது காலங்காலமாக இருந்துவரும் நம்பிக்கை.

கம்பர்:-

கம்பர் கி.பி 9-ம் நூற்றாண்டில் தஞ்சை மாவட்டம் தேரெழுந்தூரில் பிறந்தவர்.

ALSO READ  இந்திய கோவில்களும் அதில் ஒளிந்திருக்கும் அறிவியலும் உங்களுக்கு தெரியுமா?

தான் எழுதிய ராமாயணத்தை கி.பி 886-ல் திருவெண்ணெய் நல்லூர் ‘சடகோபர்’ உதவியோடு அரங்கேற்றினார். அதன் பின்னரே ‘கவிச் சக்கரவர்த்தி கம்பர்’ என்றழைக்கப்பட்டார்.

சோழ மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவைகள புலவராக மிகுந்த செல்வாக்கோடு திகழ்ந்தவர்.

சோழன் மகளுக்கும் கம்பன் மகனுக்கும் காதல் ஏற்படவே (உண்மையோ இல்லையோ இது புகழேந்திய எழுதிய ‘அம்பிகாபதி அமராவதி’ காவியம்.)

சோழ மன்னன் கோபம் கொண்டான். அம்பிகாபதி சிறைச்சேதம் செய்யப்பட்டான். இதனால் மனம் வெறுத்து நாடோடியாகப் பல்வேறு இடங்களிலும் சுற்றித்திரிந்தார்.

இறுதியாக, சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை வந்தார். அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம் ‘முடிக்கரைக்கு’ செல்லும் வழிகேட்க, அந்த சிறுவனோ, “அடிக்கரை போனால் முடிக்கரை சென்றடையலாம்” என்று கவிநயத்துடன் சொன்னான்.

ALSO READ  தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

இதை கேட்ட கம்பர், அச்சிறுவனின் பேச்சாற்றல், கவிநயத்தால் கவரப்பட்டு “நாம் செல்ல வேண்டிய இடம் முடிக்கரை அல்ல; நாட்டரசன்கோட்டைதான்” என்று முடிவு செய்தார்.

இதையடுத்து அங்கேயே தங்கினார் கம்பர். தன் இறுதி காலத்தையும் கழித்தார்.

“தாடியுடன் தள்ளாத வயதில் வந்திருப்பவர் கம்பர்” என்று தெரிந்துகொண்டார் அவ்வூரின் ஆவிச்சி செட்டியார். அதன் பிறகு ஆவிச்சி செட்டியார் தமது தோட்டத்திலேயே கம்பர் தங்க ஏற்பாடு செய்தார்.

கடைசி காலத்தில் கொடிய வறுமையில் வாடிய கம்பர், நாட்டரசன்கோட்டையின் எல்லைப்புறத்தில் இருந்த ஆவிச்சி செட்டியாரின் தோட்டத்திலேயே மரணமடைந்தார். அவர் இறந்த இடத்தில் கோயில் ஒன்று கட்டப்பட்டது. இது இன்றளவும் அப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீங்கள் பயணத்தை விரும்புகிறவர்களா? இந்தியாவின் நீண்ட ரயில் பயணங்கள்

Admin

கொல்கத்தாவை விட்டு புலம்பெயர்ந்த யூதர்கள்-காரணம் என்ன?

naveen santhakumar

டிசம்பரில் பார்வையிட மிகவும் சரியான இடங்கள்

Admin