உலகம்

மறுஉத்தரவு  வரும்வரை பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து குறையத் தொடங்கிய நிலையில், ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளிகள் தொடங்கின. கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளும் நடைபெறத் துவங்கின. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.

ALSO READ  கொரோனா தொற்று இல்லையென்றாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்-துபாய் அரசு அதிரடி

அந்தவகையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.  குறிப்பாக தமிழகத்தில்  அதிக பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் வரும் திங்கள் முதல் 9,10,11 ஆகிய வகுப்புகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். 

இதனால் 9, 10 ,11 ஆகிய வகுப்புகளுக்கு ஆன்லைன் டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தவும், விடுதிகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி வகுப்புகள் செயல்பட அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

The post மறுஉத்தரவு  வரும்வரை பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு ! appeared first on Tamil Thisai.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என்னென்ன பண்றாங்க பாருங்க- காதல் ஜோடியின் Atrocity…!

naveen santhakumar

பிரபலமான சாம்சங் நிறுவனத்தின் தலைவர் காலமானார்:

naveen santhakumar

அமெரிக்கா-தலிபான்கள் இடையே கையெழுத்தாகிறது அமைதி ஒப்பந்தம்- இந்தியா பங்கேற்ப்பு..!!!!

naveen santhakumar