உலகம்

சீனா எல்லையை மூட வலியுறுத்தி ஹாங்காங் மருத்துவர்கள் ‘ஸ்டிரைக்’

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவின் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

நேற்றைய நிலவரப்படி 361 ஆக இருந்த உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரே நாளில் 425 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நேற்றைய நிலவரப்படி 17,205 பேருக்கு பரவியிருந்த இந்த வைரஸ் தற்போதைய நிலவரப்படி 20,438 பேருக்கு பரவியுள்ளது.

சீனாவுக்கு வெளியே அந்நாட்டின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் தன்னாட்சி நகரமான ஹாங்காங்கில் இந்த வைரசுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ALSO READ  முகக்கவசம் அணியும் முறை; வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின் !

இதையடுத்து சீனாவின் வுகான் நகரில் இருந்து ஹாங்காங் வந்த 39 வயது நிரம்பிய நபர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதையடுத்து ஹாங்காங்கில் உள்ள மருத்துவர்கள் சீனாவுடனான எல்லையை உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ALSO READ  வந்தவர் கிம் ஜோங் உன் இல்லையா !!குழப்பத்தில் உலக நாடுகள்...

இதற்கிடையில், ஹாங்காங்-சீனா இடையேயான எல்லைகள் மூடப்படாது என ஹாங்காங் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் போராட்டம் தொடரலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸால் பூமிக்கு விளைந்த நன்மை….

naveen santhakumar

ஆஸ்திரேலியாவில் மானத்தை வாங்கிய இந்தியர்..என்ன பண்ணார் தெரியுமா?

Admin

கொரோனா வைரஸை ஒருபோதும் ஒழிக்க முடியாது டாக்டர் அந்தோணி ஃபவுசி… 

naveen santhakumar