உலகம்

சோனு சூட்டை கௌரவித்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்; இணையத்தில் குவியும் பாராட்டு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் சோனுசூட். இவர் சினிமாவில் வில்லனாக இருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கொரோனா காலகட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களை தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பத்திரமாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

வேலையிழந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். ஏழை மாணவர்களுக்கு செல்போன்களை வாங்கி அனுப்பி வைத்தார். அதனையடுத்து சமூக வலைத்தளங்களில் உதவி என்று யார் கேட்டாலும் மறுக்காமல் செய்யும் சேவை குணம் கொண்டவர். அதனால் மக்கள் இதுவரை சூப்பர் ஹீரோவாக பார்க்கிறார்கள் இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று நடிகர் சோனு சூட்டிற்கு கோவில் கட்டியுள்ளனர்.

இந்நிலையில் சோனு சூட்டின் சேவை மனப்பான்மையை பாராட்டி ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், தங்களது ஒரு விமானத்தில் சோனு சூட்டின் உருவப்படத்தைப் பதித்து சோனு சூட்டை வித்தியாசமான முறையில் கௌரவப்படுத்தியுள்ளது.

ALSO READ  அமெரிக்காவில் குளிர்காலம் ஆரம்பித்துள்ளதால் கொரோனா தொற்று கடுமையாக பரவும் அபாயம்:

இதனையறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும்  சோனு சூட்டின் படம் பதித்த விமானத்தின் புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர். 

The post சோனு சூட்டை கௌரவித்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்; இணையத்தில் குவியும் பாராட்டு ! appeared first on Tamil Thisai.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2050 ஆம் ஆண்டிற்குள் விவசாயத்திற்குரிய மேல்மட்ட மண் சுரண்டப்படும் அபாயம்

Admin

தெற்கு பிரேசிலில் நடந்த கொடூரம்…..கருப்பினத்தவர் அடித்து கொலை……

naveen santhakumar

ராணுவத்தின் பழைய பிரம்மாண்ட கட்டிடம் இடிப்பு :

Shobika