உலகம்

துருக்கி அதிபர் எர்டோகனை எதிர்த்து 228 நாள் பட்டினி போராட்டம் செய்த பெண் மரணம்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அங்காரா:-

துருக்கியைச் சேர்ந்த 28 வயதே ஆன இளம் இசைக்கலைஞரான ஹெலின் போலக் [Helin Bolak] கடந்த 288 நாளாக தொடுத்துவந்த பட்டினிப்போரில் இன்று உயிர் நீத்தார். 

கபந்த 2016-ம் ஆண்டு துருக்கியில் பிரபலமான இசைக்குழு க்ருப் யோரும் (Grup Yorum)  இசைக்குழு தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குழுவைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த குழுவின் தலைவர் இப்ராகிம் கோகக் மற்றும் அவரது மனைவி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

ALSO READ  காணாமல் போன வளர்ப்பு பிராணிகளை கண்டுபிடிக்கும் சீனாவின் ‘பெட் டிடெக்டிவ்’
கைதுக்கு முன் கைதுக்கு பின்

எனினும் இப்ராஹிம் கோகக் கடந்த நவம்பரில் விடுதலை செய்யப்பட்டார். கோகக்கின் மனைவி மற்றும் போலக் இருவரும் விடுவிக்கப்படவில்லை. கடந்த மார்ச் 11ஆம் தேதி  போலக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் போலக் சிகிச்சை எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டார்.

தான் பங்கு பெற்ற யோரும் இசைக்குழுவிற்கு விதிக்கப்பட்ட தடையினை நீக்கக்கோரியும் சிறைப்பிடிக்கப்பட்ட தனது சக கலைஞர்கள் ஏழு பேரை விடுவிக்கக்கோரியும் துருக்கியின் சர்வாதிகார எர்டோகன் அரசை எதிர்த்து 288 நாட்களாக தீரத்தோடு அவர் நடத்திய  உண்ணா நிலை அறப்போர் அவரைக் கொன்றுவிட்டது. 

ALSO READ  மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தந்தை காலமானார்

.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு – தலிபான் அறிவிப்பு

naveen santhakumar

“அம்மனை கொரோனா ஒன்றும் செய்யாது”…சாமியாடிய பெண்…. வைரலாகும் வீடியோ:

naveen santhakumar

நாட்டில் ஒரு கோடி பேருக்கு நான்கு வென்டிலேட்டர்களே உள்ள அவலம்…

naveen santhakumar