உலகம்

நான் அதிபராக இருக்கும் வரை தன்பாலின திருமணங்களுக்கு அனுமதி கிடையாது- புடின்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரஷ்யா:-

நான் ரஷ்யாவின் அதிபராக இருக்கும் வரை கிரம்ளின் மாளிகை ஒருபோதும் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அனுமதி அளிக்காது என்று புடின் தெரிவித்தார்.

ரஷ்ய அரசியலமைப்பு திருத்துவது தொடர்பான கூட்டம் அதிபர் விலாடிமிர் புடின்( Vladimir Putin) தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முக்கியமாக ரஷ்ய அதிபரின் அதிகாரம் வரம்பு மற்றும் பதவிகாலம் அதிகரிப்பது தொடர்பான திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

Constitution of Russia

ஏனெனில் தற்போதைய சட்டத்தின் படி அதிபரின் ஆட்சி காலம் ஆறு ஆண்டுகள் தான். அதிபராக உள்ள ஒருவர் இரண்டு முறை அதாவது 12 ஆண்டுகள் மட்டுமே அதிபராக தொடர முடியும். எனவே இதை நீட்டிப்பது தொடர்பாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

ALSO READ  ஊரடங்கால் சென்னையில் சிக்கி தவித்த ரஷ்ய நாட்டு சிவபக்தர்- மாநகராட்சி அதிகாரிகள் அடைக்கலம்

அப்போது பேசிய உறுப்பினர் ஒருவர் அரசியலமைப்பில் குடும்பம் தொடர்பான வரையறையில் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்ததுதான் ‘குடும்பம்’ என்ற குடும்பத்துக்கான வரையறையை அரசியல் அரசியலமைப்பில் சேர்ப்பது தொடர்பாக அறிவுறுத்தி பேசினார்.

அதற்கு பதிலளித்த அதிபர் புட்டின் இவ்வாறு திருத்துவதன் மூலம் சிங்கிள் பேரன்டுகளின் (single parents) உரிமை பாதிக்கப்படும் என்றார்.

ALSO READ  இரும்பிலே ஒரு இருதயம் : ராணுவ வீரரின் வித்தியாசமான லவ் ப்ரபோஸல்

ஆனால் ஒருபோதும் தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்படாது என்று கூறினார்.

இது தொடர்பாக மேலும் கூறிய புட்டின் ரஷ்யாவில் ஒரு போதும் தாய்-தந்தை என்ற பாரம்பரிய குடும்ப கட்டமைப்புக்கு எதிராக பெற்றோர்-1 பெற்றோர்-2 என்ற முறையை அனுமதிக்கவே முடியாது என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சூரியனின் மேற்பரப்பு இப்படித்தான் இருக்கும்.. முதல் முறையாக வெளியான புகைப்படம்

Admin

Road Of Death – உயிர்களை பறிக்கும் பேய் சாலை …!

naveen santhakumar

உருவகேலியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்

Admin