உலகம்

நாயின் வயிற்றில் இருந்த மர்ம பொருள்… மருத்துவர்கள் அதிர்ச்சி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தென்னாப்பிரிக்காவில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த நாய்க்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அதன் வயிற்றிலிருந்த பொருளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா மாகாணத்தை சேர்ந்த ரிச்சர்ட் என்பவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு நாய்க்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது.

இந்நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாய்க்கு மருத்துவர்கள் உடனடியாக ஸ்கேன் செய்து பார்த்தபோது நாயின் வயிற்றில் மோதிரம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து நாய்க்கு சிகிச்சையளித்து மோதிரத்தை வெளியே எடுத்தனர்.

ALSO READ  அதிமுகவில் "ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கிறார்கள்"; டி.டி.வி தினகரன் பேட்டி!

சில தினங்களுக்கு முன்பு ரிச்சர்ட் தனது நிச்சயதார்த்த மோதிரத்தை காணாமல் வீடு முழுவதும் தேடியுள்ளார்.ஆனால் கிடைக்கவில்லை. அதேசமயம் தன்னுடைய செல்ல நாய் மோதிரத்தை விழுங்கியதை அவர் வித்தியாசமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் நாய் மன்னிப்பு கேட்பது போன்று போஸ் கொடுத்துள்ளதையும், காணாமல் போன மோதிரத்தின் போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியல்… முதல் நாடு எது ??இந்தியன் இடம் என்ன??

naveen santhakumar

டெக்சாஸ் நகர மேயராக 7 மாத குழந்தை வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் பதவியேற்பு

Admin

நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்… பிரிட்டன் மற்றும் ஜெர்மனி புதிய திட்டம்…

naveen santhakumar