உலகம்

பொய் சொல்லலாம்.. அதுக்குன்னு “கொரோனா வைரஸ்” பற்றி இப்படி சொல்லலாமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 27 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது.

சீனாவில் வுஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸிற்கு 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் simpsons cartoon மற்றும் asterix comics ஆகியவற்றில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து 27 வருடங்களுக்கு முன், அதாவது 1993 ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாக பரவியது.

ALSO READ  லெபனானை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் பயங்கர தீ விபத்து… 

மேலும் இதுகுறித்த தகவல்களை ஆய்வு செய்ததில் இவை அனைத்தும் முற்றிலும் பொய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கார்ட்டூன்களில் அதில் 1993 ஆம் ஆண்டில் ஜப்பானில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய ஒசாகா காய்ச்சல் பற்றிய காட்சிகளே இடம்பெற்றுள்ளன என்றும், அதனை நமது இணையவாசிகள் எடிட் செய்து கொரோனாவாக மாற்றி சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர் என்பதும் தெரிய வந்தது.

ஏற்கனவே போலி செய்திகளை கட்டுப்படுத்துவதில் சமூக வலைதளங்கள் மிகவும் அக்கறை எடுத்து வரும் வேளையில், இது போன்ற தவறான தகவல்களை பரப்புவதால் மக்கள் பீதியடைந்து மிகவும் பாதிப்படைய அதிக வாய்ப்பு உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிறுநீருக்கு பதிலாக ஆல்கஹாலை வெளியேற்றும் பெண்- மருத்துவர்கள் அதிர்ச்சி…

naveen santhakumar

வாய்க்குள் வளரும் முடி- அவதிப்படும் இளம்பெண்.

naveen santhakumar

உலகின் முதலாவது தொலைபேசி அழைப்பு அழைக்கப்பட்ட தினம் இன்று…..

naveen santhakumar