உலகம்

வெளிநாடு செல்ல சிறப்பு சலுகை அறிவித்த இண்டிகோ நிறுவனம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல வான்வழி சேவை நிறுவனமான இண்டிகோ நிறுவனம் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி ‘இண்டிகோ சர்வதேச விமான சேவை கட்டணம் ரூ.3,499 முதல்’ விற்கப்படுகிறது.

இந்த சலுகைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பிப்ரவரி 18-ம் தேதி முதல் பிப்ரவரி 21-ஆம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனவும், மார்ச் 1, 2020 முதல் செப்டம்பர் 30, 2020 வரையிலான பயணங்களுக்கு இந்த டிக்கெட்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பேங்க் ஆப் பரோடா வங்கி க்ரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு டிக்கட் புக் செய்தால் ரூ.2000 கேஷ்பேக் அளிக்கப்படுகிறது.

ALSO READ  மனுஷன் கேக் வெட்டி பார்த்திருப்பீங்க…..ஆனால் இங்க மனுஷனையே கேக் ஆக்கி வெட்டிட்டாங்க…..

அதேப்போல் HDFC வங்கியில் PayZapp சலுகையினை பயன்படுத்தி டிக்கட் புக் செய்தால் 15% (ரூ.1000 வரை) கேஷ்பேக் அளிக்கப்படுகிறது

பிப்ரவரி 18-ம் தேதி முதல் பிப்ரவரி 21-ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழிகளில் செய்யும் முன்பதிவுகளுக்கு இந்த சலுகை பொருந்தும் எனவும் , குரூப் புக்கிங் செய்தால் இந்தச் சலுகை கிடைக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனுஷன் கேக் வெட்டி பார்த்திருப்பீங்க…..ஆனால் இங்க மனுஷனையே கேக் ஆக்கி வெட்டிட்டாங்க…..

naveen santhakumar

டெல்லி-லண்டன் பேருந்து வசதி;கட்டணம் எவ்ளோனு கேட்டா??? ஹார்ட் அட்டாக் வந்திடும்!!!!!!

naveen santhakumar

ஆஸ்திரியா மருத்துவமனையில் தீ விபத்து..

Shanthi