உலகம்

பாகிஸ்தானில் 15 வயது சிறுமியை கடத்தி தொடர்ந்து 24 மணிநேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லாகூர்:-
பாகிஸ்தானில் 15 வயது சிறுமி, தொடர்ந்து 24 மணி நேரம் கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதம், பெண் அடிமைத்தனம், சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்று நமது அண்டை நாடான பாகிஸ்தான். இங்கு அவ்வபோது சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஷைக்குபுரா நகரை (Sheikhupura city) சேர்ந்தவர் முஹமத் சஜித் (Muhammad Sajid). இவர் அக்குவக்ட் இஸ்லாமிக் மைக்ரோ ஃபைனான்ஸ் வங்கியில் (Akhuwat Islamic Microfinance Bank) வேலை செய்து வருகிறார் தனது நண்பர்கள் 4 பேரை அழைத்துக்கொண்டு கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வீட்டில் தனியாக இருந்த மரியா ஜலால் (Maria Jalal) என்ற 15 வயது சிறுமியை சாஜித்தும் அவரது நண்பர்களும் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.

ALSO READ  வடகிழக்கில் நிலநடுக்கம் - ரிக்டரில் 3.6 ஆக பதிவு

பின்னர் அந்த சிறுமியை ஒரு நாள் முழுவதும் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை அடுத்து நிலைகுலைந்த அந்த சிறுமியை வீட்டிற்கு அருகே வீசிவிட்டு 5 பேரும் தப்பிச் சென்றுள்ளனர். 

இது குறித்து மரியாவின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

15 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை நாடுமுழுவதும் பரவியதை தொடர்ந்து சிறுபான்மையினர்கள் மீதான தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்கள் வலுக்கத்தொடங்கியுள்ளன.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வளர்களும், மனித உரிமை அமைப்புகளும் அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. 

ALSO READ  சீனாவில் புதிய வைரஸ் 7 பேர் பலி 60 பேர் பாதிப்பு… 

இந்த சம்பவத்தை தொடர்ந்து #SpeakUpForPakMinorities என்ற ஹேஸ் டெக்கை ட்விட்டரில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர். 

SpeakUpForPakMinorities இயக்கம் இந்த கொடூர சம்பவம் குறித்து கூறுகையில்:-

அந்த சிறுமியின் ஆடைகளை கிழித்து மாலை, இரவு, மீண்டும் காலை என்று தொடர்ந்து வன்கொடுமை செய்துள்ளனர். அவர்கள் அந்தப் பெண்ணை மட்டும் வன்கொடுமை செய்யவில்லை, அவரது  ஆன்மாவையும் வன்கொடுமை செய்துள்ளனர் என்று கூறினார்கள்.

Legal Evangelical Association Development (LEAD) என்ற தன்னார்வ அமைப்பு அளித்துள்ள தரவின் படி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் முதல் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் வரையில் பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 28 சிறுபான்மையின பெண்கள் கட்டாயம் திருமணம், பாலியல் வன்கொடுமை, தாக்குதல், கடத்தல் உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்த பிரேசில் உயர் அதிகாரிக்கு கொரோனா காய்ச்சல்……

naveen santhakumar

உலகின் கடைசி பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கியும் வேட்டையாடப்பட்ட சோகம்….

naveen santhakumar

கொரோனா பரவாமல் தடுக்க பிறந்த குழந்தைக்கு முககவசம்….

naveen santhakumar