உலகம்

இந்தியா உட்பட 20 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சவுதி செல்ல தடை:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரியாத்:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் தனித்தனியாக வழிகாட்டு நெறிமுறைகள், பயணக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. வழக்கமான விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப, சில நாடுகள் இடையே ஏர் எப்பிள் என்ற இருதரப்பு ஒப்பந்த அடிப்படையிலான விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதற்கும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சவுதி அரேபிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. தூதரக அதிகாரிகள், சவுதி குடிமக்கள் மருத்துவ பணியாளர்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  அனைத்தும் தனியார்மயம்- நிர்மலா சீதாராமன் ஐந்தாம் கட்ட அறிவிப்பு... 

தடை செய்யப்பட்ட நாடுகள்: ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, லெபனான், துருக்கி, அமெரிக்கா, ஸ்வீடன், பிரேசில், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, இத்தாலி, அயர்லாந்து, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஜப்பான்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

NASA-வின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்:

naveen santhakumar

தென் ஆப்பிரிக்க வரலாற்றில் முதன்முதலாக சிறைக்கு செல்லும் அதிபர் :

Shobika

தேடப்படும் குற்றவாளியாக மாறிய பிச்சைக்காரன்…ஏன் தெரியுமா..

Admin