உலகம்

மாயமான விமானத்தில் பயணித்த 28 பேரும் பலி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்கோ:

ரஷ்ய கிழக்கு பகுதியில் கம்சாட்கா தீபகற்பம் அமைந்துள்ளது.இங்கிருந்து நேற்று காலையில் ‘அன்டோனாவ் ஆன்-26 ’ ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 22 பயணிகளும் 6 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.இந்த விமானம், பலானா நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க தயாரானது. அப்போது திடீர் என்று கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மாயமான விமானம் கடலில் விழுந்த விபத்தில் 28 பேர் பலி | Malayagam News

அந்த விமானம் தரையிறங்கவில்லை. அதன் நிலை என்னவென்று தெரியாமல் மாயம் ஆனது. அந்த விமானத்தை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.ரஷ்ய விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கின.பலமணி நேர தேடுதலுக்கு பிறகு மாயமான விமானத்தின் சில சிதைவுகள் விமான நிலையத்தில் இருந்து 5 கி.மீ தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

ALSO READ  டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் நடந்த சுவாரசியமான விஷயம்
விமானம் கடலில் விழுந்து 28 போ் பலி

ஒரு சில பாகங்கள் தரையிலும், சில பாகங்களின் சிதைவுகள் கடலிலும் கண்டுபிடிக்கப்பட்டன.விமானத்தின் நிலை என்ன..???? அதில் பயணம் செய்த 28 பேரின் கதி என்ன…??? என்பது தெரியாமல் இருந்து வந்தது.விமான நிலையத்தை சுற்றியுள்ள 25 கி.மீ தூரத்துக்கு ‘ஓ கோட்ஸ்’ கடலை மையமாக கொண்டு தேடும் பணி நடந்தது.

தற்போது இந்த விமானம் கடலில் விழுந்ததாக தெரிய வந்துள்ளது. இதில் பயணம் செய்த 28 பேரும் நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம். யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷ்யாவில் 1969 – 1986 வரை தயாரிக்கப்பட்ட ‘ஆன்-26 ’ வகை விமானங்கள் சமீப காலமாக பல விபத்துகளில் சிக்கியுள்ளன.சமீப காலத்தில் இந்த ரக விமானங்களால் நடந்த 2 விபத்துகளில் பல பேர் உயிரிழந்துள்ளனர்.ரஷ்யாவில் 2019 மே மாதம் நடந்த ‘ கோய் சூப்பர் ’ விமான விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இப்போது மீண்டும் இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு….4 பேர் பலி …3 பேர் படுகாயம்….

Shobika

தடுப்பூசி போடாதவர்களுக்கு டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் – பேராசிரியர் சாரா வாக்கர்

News Editor

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட பாணியில் ‘நாட்டை விட்டு வெளியேறி விடுவதாக’ பிரச்சாரம் செய்த டிரம்ப்:

naveen santhakumar