உலகம் தொழில்நுட்பம்

99 ஸ்மார்ட்போன்கள் மூலம் கூகுள் மேப்பை ஏமாற்றிய ஜெர்மன்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒரே நேரத்தில் 99 ஸ்மார்ட் போன்களில் கூகுள் மேப் செயலியை ஓப்பன் செய்த ஜெர்மானியர் ஒருவர் அந்த போன்கள் எல்லாவற்றையும் ஒரு சிறிய சிவப்பு நிற தள்ளு வண்டியில் ஒன்றாக போட்டு பெர்லின் நகர வீதிகளில் அதை இழுத்துச் செல்ல ஒருவரை ஏற்பாடு செய்தார்.

அதை தனது YouTube சேனலில் எவ்வாறு டிராஃபிக்கை ஹேக் செய்வது என்று ஒளிபரப்பும் செய்தார்.

இந்த கண்கட்டு வித்தையின் காரணமாக ஒரே நேரத்தில் 99 வாகனங்கள் வீதியில் செல்வதாக நினைத்து, நிஜத்தில் காலியாக கிடந்த பெர்லின் வீதிகள் அனைத்திலும் டிராபிக் நெரிசலைக் குறிக்கும் வகையில் பச்சையிலிருந்து சிவப்பு வரிகள் கூகுள் மேப்பில் தோன்றின. இதனால் உணவு மற்றும் பிற பொருட்களை டெலிவரி செய்வோர் வேறு பாதைகளில் சென்றனர். வாகன ஓட்டிகளும் வேறு பாதைகளை தேர்ந்தெடுத்தனர்.

ALSO READ  மிஸ் பண்ணிடாதீங்க - இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது

பச்சை நிறத்தில் காணப்பட்ட பெர்லின் சாலைகள் எல்லாம் சிவப்பாக மாறியதால் கூகுள் மேப் உபயோகிப்பாளர்கள் திகைத்தனர்.

சைமன் வெக்கெர்ட் (Simon Weckert) என்ற இந்த ஜெர்மன் எதற்காக கூகுள் மேப்பை ஏமாற்றி இந்த விளையாட்டை நடத்தினார் என்பது தெரியவில்லை.

ALSO READ  ‘End card’ போட தயாராகிறதா ஃவோடபோன் நிறுவனம்
சைமன் வெக்கெர்ட்.

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸை குணப்படுத்த உலக சுகாதார நிறுவனம் (WHO) நான்கு முக்கிய மருந்துகளை சோதனை செய்கிறது…..

naveen santhakumar

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளியின் நுரையீரல் வீடியோ…

naveen santhakumar

கொரோனா பாதிப்பு அதிகமானதை தொடர்ந்து கிராமத்தை சுற்றி அகழி வெட்டி தனிமைப்படுத்திய அதிகாரிகள்… 

naveen santhakumar