உலகம்

விண்வெளியில் ஒரு ஆச்சரியம்- நட்சத்திரம் மறைந்து போனதை கண்ட விஞ்ஞானிகள்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விண்வெளி ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது மிகப் பிரம்மாண்டமான தொலைநோக்கியின் வழியாக பெரிய நட்சத்திரம் ஒன்று தனது இறுதி காலத்தில் மறைவதை ஆய்வாளர்கள் கண்டுள்ளனர்.

ஐரோப்பாவின் தெற்கு அப்சர்வேட்டரி (European Southern Observatory) மையத்தில் உள்ள மிகப் பிரம்மாண்டமான தொலைநோக்கி (Very Large Telescope (VLT)) மூலமாக இந்த நட்சத்திரக் கூட்டத்தை ஆய்வு செய்த போது பிரம்மாண்டமான நட்சத்திரம் ஒன்றை கண்டுள்ளனர்.

அந்த நட்சத்திரம் குறைந்த பிரகாசத்தோடு மங்கலாக தெரிந்துள்ளது அந்த நட்சத்திரத்தை சுற்றி பிரம்மாண்டமான தூசுப்படலம் இருப்பதன் காரணமாக அதன் ஒளி மங்கி மிகவும் மங்கலாக தெரிகிறது என்று விஞ்ஞானிகள் முதலில் எழுதி உள்ளார்கள் ஆனால் அந்த நட்சத்திரம் கருந்துளையோடு இணைந்து சூப்பர்நோவா உருவாக்குகிறது என்பதை பின்னர் கணித்துள்ளனர். 

அதாவது பொதுவாக ஒரு நட்சத்திரம் தனது இறுதி காலத்தில் தனது பிரகாசத்தை இழந்து கருந்துளையோடு இணைந்து மறைந்துபோய்விடும்.

இந்த நிகழ்வு குறித்து அயர்லாந்தின் டப்ளின் நகரில் உள்ள டிரினிடி கல்லூரி ஆராய்ச்சி மாணவர் ஆண்ட்ரூ ஆலன் கூறுகையில்:-

ALSO READ  அமெரிக்க இரட்டைக் கோபுர தீவிரவாத தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்..!

விண்வெளி ஆராய்ச்சியில் முதல் முறையாக ஒரு பிரம்மாண்ட நட்சத்திரம் ஒன்று தன் இறுதி காலத்தை தற்பொழுது நாம் கண்டுள்ளோம் என்று கூறினார்.

கிம் மேன் குள்ள நட்சத்திரக் கூட்டத்தை (Kinman Dwarf galaxy) 2001 2011 காலகட்டத்தில் பல்வேறு முறை தொலைநோக்கி மூலமாக பல்வேறு ஆய்வுகள் செய்துள்ளனர் அதில் தற்போது மறைந்து போன பிரம்மாண்ட நட்சத்திரத்தையும் ஆய்வு செய்துள்ளனர் தொடர்ச்சியான ஆய்வுகளின் படி இந்த நட்சத்திரம் தனது இறுதி காலத்தில் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

courtesy.

இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். நாம் ஒரு நட்சத்திரத்தை காண்கிறோம் என்றால் அதன் ஒளி நமது கண்களுக்குப் புலனாகும். உண்மையில் அந்த ஒளி அந்த நட்சத்திரத்தில் இருந்து பல ஆயிரம் ஆண்டுகள் முன்னரே புறப்பட்டு இன்றைய தேதியில் நமது கண்களுக்கு புலனாகிறது. அதேபோல தற்பொழுது இந்த நட்சத்திரம் தனது இறுதி காலத்தில் மறைந்துள்ளது, நிச்சயமாக இந்த நிகழ்வு பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்து அது தற்பொழுது நமக்கு புலனாகியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

ALSO READ  பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி கூறிய கருத்திற்கு எதிராக கொதித்த கம்பீர், யுவராஜ் மற்றும் ஹர்பஜன்... 

இந்த நட்சத்திரம் சராசரியாக 75 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் கும்பம் நட்சத்திரக் கூட்டத்தில் (constellation of Aquarius) கின்மேன் குள்ள நட்சத்திர தொகுதியில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது.

2001-2011 காலகட்டத்தில் இந்த நட்சத்திரத்தை ஆய்வு செய்ததில் இந்த நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட ஒளி தொடர்ச்சியாக நீலநிறத்தில் இருந்துள்ளது. இந்த நட்சத்திரம் சூரியனை விட 2.5 மில்லியன் மடங்கு பிரகாசமாக இருந்துள்ளது. 

மொத்தத்தில் வானியலில் ஒரு அதிசய நிகழ்வாக நட்சத்திரம் தனது இறுதி காலத்தில் மறைந்து போனதை ஐரோப்பிய ஆய்வாளர்கள் கண்டுள்ளனர். இது விண்வெளி தொடர்பான ஆராய்ச்சியில் நிச்சயமாக குறிப்பிடத்தக்க சாதனையாகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல ஆப்பிள் நாளிதழ் மூடப்பட்டது

News Editor

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு..!

News Editor

மறுஉத்தரவு  வரும்வரை பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு !

Admin