உலகம்

63 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த பர்ஸ் கண்டுபிடிப்பு.. உள்ளே என்ன இருந்ததுனு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவிங்க..!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஓஹியோ:-

அமெரிக்காவில் 1957ஆம் ஆண்டு தொலைந்துபோன பள்ளி மாணவி ஒருவரின் பர்ஸ் கிட்டதட்ட அரை நூற்றண்டுகளுக்கு பின் மீண்டும் கிடைத்துள்ளது. இந்த பர்ஸ்ட் நம்மை அமெரிக்காவின் 50s ரெட்ரோ காலத்திற்கே கூட்டிச் சென்றது.

பேட்டி ரம்ஃபோலா (Patti Rumfola) என்ற மாணவி அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஹூவர் மேல்நிலைப்பள்ளியில் (தற்போது வடக்கு கேன்டன் (North Canton)நடுநிலைப்பள்ளி 1957 ஆம் ஆண்டு தன்னுடைய பதினான்கு வயதில், இந்த பர்ஸை தவறவிட்டார்.

Patti Rumfola.

கண்டெடுக்கப்பட்ட இந்த பர்ஸில் பேட்டி ரம்ஃபோலா, அவரது குடும்பம் மற்றும் அவரது செல்ல நாய் உள்ளிட்டவற்றின் ஏராளமான கருப்பு-வெள்ளை படங்கள் இருந்தது.

கூடவே, அவரது மேக்கப் கிட்கள், சீப்பு, பென்சில்கள், ஸ்கேல், 26 சென்ட் காசுகள், நார்த் கேன்டன் வைக்கிங் ஸ்கூலின் கால்பந்தாட்ட அட்டவணை, பிரிக்கபடாத சூயிங்கம், உள்ளிட்ட பல பொருட்கள் இருந்தது.

ALSO READ  சவுதியில் புதிய மாற்றத்தை அமல்படுத்திய முகமதுபின் சல்மான் :
Pastel Pink Lipstick.

உண்மையில், பள்ளி நிர்வாகம் சென்ற ஆண்டே பள்ளி பராமரிப்புப் பணிகளில் போகுது மாணவர்களின் லாக்கர் அருகே சுவற்றோடு உள்ளே இருந்த இந்த பிங்க் நிற பர்ஸை கண்டுபிடித்தது. அப்போதே இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது பள்ளி நிர்வாகம்.

இந்த பர்ஸ் பள்ளியில் 1960 ஆம் ஆண்டு படிப்பை முடித்த பேட்டி ரம்ஃபோலா என்பவருடையது என தெரியவந்தது.

எனவே சமூக வலைதளங்கள் மூலமாக அவரது குடும்பத்தை தேடியது. ஒருவழியாக அவரின் குடும்பத்தை கண்டுபிடித்தது. ஆனால் ரம்ஃபோலா உயிரோடு இல்லை. பள்ளி ஆசிரியரியையாக அன்னாபோலிஸ்-ல் (மேரிலேண்ட்) பணி செய்தவர். 2013 ஆம் ஆண்டு தனது 72-வது வயதில் மரணம் அடைந்தார்.

ALSO READ  கணினிப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்

அவருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட ரம்ஃபோலாவின் பர்ஸ் அவர்களது பிள்ளைகளுக்கு ஒரு பொக்கிஷமாக விளங்குகிறது. அதிலிருந்த சில பென்னி காசுகளை தங்களது தாய் நினைவாக ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டனர்.

இந்த பர்ஸ் தொலைந்த வருடம் தான் ரஷ்யாவின் ஸ்புட்னிக் 1 ஏவப்பட்டது, I Love Lucy ன் கடைசி எபிஸோட் ஒளிபரப்பப்பட்டது, முதல் ஃப்ரிஸ்பீ டிஸ்க் விற்க்கப்பட்டது…..


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவுக்கு Good Bye சொல்ல பாலத்தில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மக்கள்- காற்றில் பறந்த சமூக இடைவெளி… 

naveen santhakumar

அதிகரிக்கும் கொரோனா  மலேசியாவில் அவசரநிலை பிரகடனம் !

News Editor

வன்கொடுமைக்கு உள்ளான பெண்களுக்கு அபராதம் விதித்த போலீசார்.. 

naveen santhakumar