உலகம்

கொரோனா வைரஸ் குறித்து முன்னரே போடப்பட்ட ட்விட், முன்னரே எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம், முன்னரே எழுதப்பட்ட திகில் நாவல்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் ஒரு புறம் உலகை ஆட்டிப்படைத்து வருகிறது; மறுபுறம் இந்த வைரஸ் குறித்து சர்ச்சைகளும் அவ்வப்போது வெடித்து வருகின்றன. 

சீன ராணுவம்தான் இந்த கொரோனா வைரஸை லீக் செய்து விட்டதாக ஒரு சர்ச்சை உள்ளது. இந்த வைரஸை பயோ ஆயுதமாக சீன ராணுவம் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், இதுதொடர்பான பணிகள் வூஹான் மாகாணத்தில் உள்ள அதன் ஆய்வகத்தில் நடந்து வந்ததாகவும் அங்கிருந்துதான் இது லீக் ஆனதாகவும் சர்ச்சைகள் உள்ளன.

1981ம் ஆண்டு டீன் கூன்ட்ஸ் (Dean Koontz) என்பவர் எழுதிய நாவல் ‘தி ஐஸ் ஆப் டார்க்னஸ்’ (The Eyes Of Darkness).

ALSO READ  ஒரே நாளில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு; 

இந்த நாவலில் வூஹான்-400 (Wuhan-400) என்ற வைரஸ் குறித்து கூறப்பட்டுள்ளது.

சீன ராணுவம் அந்த வைரஸை  வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கியதாக கூறுகிறது இந்த நாவல்.

கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி மார்கோ அகோர்டஸ் (Marco Acortes) என்பவர் போட்ட ஒரு ட்விட்டில்:-

‘Corona virus….its coming’ என்று குறிப்பிட்டுள்ளார். 

இது தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உலக முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் குறித்து இவருக்கு எப்படி 2013ம் ஆண்டே தெரியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்போது ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் குறித்து 2013ம் ஆண்டே எப்படி கூற முடியும் என்று பலரும் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர். இதனிடையே இந்த நபர் 2016ம் ஆண்டுடன் ட்விட்கள் போடுவதை நிறுத்தி விட்டார் என்பது மேலும் பல சந்தேகங்களை கிளப்புகிறது.

ALSO READ  ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் கார்த்தி !

இதேபோல் 2008ஆம் ஆண்டு ஸ்டீவன் ஷோடர்பெர்க் இயக்கத்தில் கேட் வின்ஸ்லெட் நடிப்பில் வெளிவந்த காண்டஜியான் (Contagion) படமும் இதேபோல் சீனாவிலிருந்து MEV-1 என்ற வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஆட்டிப்படைத்து பல உயிர்களை கொல்லும். மேலும், அந்தத் திரைப்படத்தில் காட்டப்பட்ட வைரஸ் தாக்குதலில் அறிகுறிகளும், உயிரிழப்பு கொரோனா வைரஸை ஒத்துப்போகிறது. 

இதுபோன்ற நிகழ்வுகள் அனைத்தும் தற்செயலா அல்லது திட்டமிடப்பட்டவையா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவை வெளுத்து வாங்கும் கனமழை….உயிர் மற்றும் பொருள் சேதம்….!!!!

Shobika

இணையத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்.

naveen santhakumar

Work From Home.. 70 லட்சம் பெண்கள் கர்ப்பம்.. என்னடா நடக்குது?….

naveen santhakumar