உலகம்

அமெரிக்க மாணவி ரஷ்யாவில் மர்ம மரணம்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

அமெரிக்க மாணவி ஒருவர் ரஷ்யாவில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவவியின் உடல் காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Missing U.S. Student Found Dead in Russia, Suspected Killer Arrested - The  Moscow Times

ரஷ்யாவில் நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை பல்கலை கழகத்தில் அமெரிக்காவை சேர்ந்த கேத்தரீன் செரவ் (வயது 34) என்ற மாணவி படித்து வந்தவர். இந்நிலையில் செரவ் திடீரென கடந்த செவ்வாய் கிழமை காணாமல் போயுள்ளார்.

பின்னர், மாஸ்கோவிற்கு கிழக்கே 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போர் நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு காட்டுப்பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

File photo: Police officers blocking a road in the Nizhny Novgorod region.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அறிமுகம் இல்லாத நபருடன் காரில் செல்லும்போது கடைசியாக தனது தாயாருக்கு செய்தி அனுப்பியுள்ளார். நான் கடத்தப்படவில்லை என நம்புகிறேன் என்று அதில் தெரிவித்து உள்ளார்.

ALSO READ  12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து...

எனினும், மருத்துவமனைக்கு செல்வதற்கு பதிலாக கார் காட்டுக்குள் சென்றுள்ளது என கூறப்படுகிறது. காட்டில் உள்ள டவரில், செரவின் செல்போன் அழைப்பு சென்றது பதிவாகி உள்ளது. இதுபற்றி 40 வயதுடைய நபர் ஒருவரை விசாரணை குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ALSO READ  அமெரிக்காவில் நடைபெற்ற சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் இருவர் பலி :

நாங்கள் நிலைமையை உன்னிப்புடன் கண்காணித்து வருகிறோம் என அமெரிக்க தூதரகம் தெரிவித்து உள்ளது. கைது செய்யப்பட்ட நபர் கடந்த காலங்களில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் ஆவார்.

போருக்கு அருகிலுள்ள நிஸ்னி நோவ்கோரோடில் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சட்டம் படிப்பதற்காக செரூ கலிபோர்னியாவிலிருந்து ரஷ்யாவுக்கு 2019 இல் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என்னது! சீன அதிபர் Xi Jinping இல்ல Kim Jong Un-னா பா.ஜ.க. தொண்டர்கள் செய்த அட்ராசிட்டி…

naveen santhakumar

ஆப்பிரிக்கவை தடுப்பூசி மருந்துகளை பரிசோதனை செய்யும் கூடமாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது: உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஆவேசம்….

naveen santhakumar

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு?

Shanthi