உலகம்

பூமிக்கு ஆபத்தை விளைவிக்குமா ராட்சச கல்…??????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

விண்வெளியில் லட்சக் கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இதுவரை 11 லட்சம் விண்கற்கள் சுற்றி வருவதை கண்டுபிடித்துள்ளனர்.இந்த கற்கள் பெரிய பாறாங்கல் அளவில் இருந்து சிறிய மலை குன்று அளவு வரை இருக்கின்றன. இந்த கற்கள் அடிக்கடி பூமி அருகே கடந்து செல்வது வழக்கம்.

பூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள்! 2020 இன்னும் மோசமாகுமா? இதனால்  ஆபத்தா? | NASA Says Three Monster Asteroids Heading Towards Earth This June  2020 - Tamil Gizbot

அவற்றில் சில கற்கள் பூமி மீதும் விழுந்துள்ளன. ஆனால் பெரும்பாலான கற்கள் வளிமண்டலத்தில் வெடித்து பூமிக்கு வரும் போது காற்று உராய்வு ஏற்பட்டு தீ பிடித்து விடும். எனவே பூமிக்குள் வருவதற்குள் அது எரிந்து சாம்பலாகி விடுவது உண்டு. அதையும் மீறி முழுமையாக எரியாமல் பூமியில் விழும் கற்களும் உண்டு.

ALSO READ  யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் - பாகிஸ்தானியர்கள் கைது..
Asteroid hitting Earth - Latest News on Asteroid hitting Earth | Read  Breaking News on Zee News

இரவு நேரத்தில் வானத்தில் திடீரென எதோ ஒரு பொருள் தீபிடித்து எரிந்து கொண்டு பாய்ந்து செல்வதை பார்க்கலாம். விண்கற்கள் எரிவதுதான் இப்படி நமக்கு தென்படும்.இந்நிலையில் ராட்சத பாறாங்கள் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. அது ஒரு விளையாட்டு மைதானம் அளவிற்கு பெரிதாக உள்ளது.

பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்!! – வவுனியா நெற்

அந்த கல்லுக்கு 2008 ஜி.ஓ. 20 என்று பெயரிட்டுள்ளனர். அது வருகிற 24-ம் தேதி பூமிக்கு அருகில் வரும்.ஆனாலும் இதனால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அது பூமியில் இருந்து 59 லட்சத்து 38 ஆயிரம் கி.மீ தூரத்தில் கடந்து செல்கிறது.எனவே புவி ஈர்ப்பு விசைக்குள் அது வராது. இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள தடை – உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

Shobika

ஜப்பான் மற்றும் தென் கொரிய நாட்டவர்கள் இந்தியா வர தடை-காரணம் என்ன..???

naveen santhakumar

150 இந்தியர்களை தாலிபான்கள் விடுவிப்பு

News Editor