உலகம்

பாகிஸ்தான் மீது அப்கானிஸ்தான் புகார் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காபூல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடந்து வந்த போதிலும் பல பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்க படைகள் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து வந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து அமெரிக்க படை வாபஸ் பெறப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்திற்குள் முழு படையும் வெளியேறி விடும்.

நாட்டை கைப்பற்ற தலிபான்களுக்கு பாகிஸ்தான் உணவு, ஆயுத சப்ளை: ஆப்கானிஸ்தான்  புகார் || Tamil news Pakistan food arms supply to Taliban to seize the  country Afghanistan complaint

அமெரிக்கா வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல இடங்களையும் கைப்பற்றி வருகிறார்கள்.இதுவரை நாட்டில் 85 சதவீத நிலப்பரப்பை கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் கூறுகிறார்கள். ஆனால் மொத்தமுள்ள 400 மாவட்டத்தில் 3-ல் ஒரு பகுதி மட்டுமே தலிபான்களிடம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ALSO READ  ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் 3 ராணுவ வீரர்கள் பலி :
தலிபான்களுக்கு பயந்து தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற ஆப்கானிஸ்தான் வீரர்கள்  || Over 1,000 Afghan Troops Flee Taliban Into Tajikistan

ஆங்காங்கே அரசு படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே தீவிரமாக சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையே தலிபான்கள் நாட்டை முழுமையாக கைப்பற்றுவதற்கு பாகிஸ்தான் உதவி வருவதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.போரில் ஈடுபட்டு வரும் தலிபான்களுக்கு ஆயுத உதவி, உணவு, வழிகாட்டு தகவல்கள் போன்றவற்றை வழங்கி வருவதாகவும், பாகிஸ்தானின் விமானப்படை தலிபான்களுக்கு உதவுவதாகவும் ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி இருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் காலமானார்:

naveen santhakumar

சீன செவிலியர்களுக்கு எவ்வளவு பெரிய மனசு… குவியும் பாராட்டுகள்

Admin

கொரோனா பரவலால் ஊரடங்கை நீட்டித்து பிரான்ஸ் !

News Editor