உலகம்

AG600 கடல் விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் தொடங்கியது… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெய்ஜிங்:-

சீனாவின் லட்சிய திட்டங்களில் ஒன்றான AG600 என்ற கடல் விமானத்தின் (Sea Plane) முதல் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது.

சீனாவின் ஷான்டோங் மாகாணத்தில் (Shandong province) உள்ள ரிஸாவ் நகர் (Rizhao) அருகே உள்ள ஷான்ஸிஹே விமான நிலையத்திலிருந்து (Shanzihe Airport) நான்கு பேருடன் நேற்று காலை 9.28 மணிக்கு கிளம்பிய இந்த கடல் விமானம் 46 நிமிட பயணத்திற்கு பிறகு குயிங்டாவோ (Qingdao) நகரிலுள்ள மஞ்சள் கடலில் (Yellow Sea) 10.14 மணிக்கு இறங்கி கடல் சோதனை ஓட்டத்தை  தொடங்கியது. 

சரியாக 4 நிமிடங்கள் கடல் நீரில் மிதந்த இந்த கடல் விமானம் 10.18 மணிக்கு மீண்டும் பறந்து ஷான்ஸிஹே விமான நிலையத்தை சென்றடைந்தது. இந்த சோதனை ஓட்டம் மிக முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

courtesy.

1970களில் சீனா தனது முதல் கடல் விமானமான SH-5  விமானத்தை ராணுவ பயன்பாட்டுக்காக கட்டமைத்தது. நீண்டகாலம் பயன்படுத்தப்பட்ட இந்த  விமானம் பின்னர் நீக்கப்பட்டது. தற்போது சீனா தனது இரண்டாவது கடல் விமானத்தை உருவாக்கி உள்ளது.

ALSO READ  ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே பயங்கர மோதல்: 36 பேர் பலி

AG600 கடல் விமானமானது 37 மீட்டர் நீளம் கொண்டது. இதன் இரண்டு இறக்கைகளுக்கு (Wingspan) இடைப்பட்ட நீளம் 38.8 மீட்டராகும், இது கிட்டத்தட்ட போயிங் 737 விமானத்திற்கு சமமாக உள்ளது. 

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நான்கு WJ-6 டர்போ என்ஜின்களை கொண்டுள்ளது. இந்த விமானம் கிட்டத்தட்ட 53.5 மெட்ரிக் டன் எடை வரை தூக்கும் திறன் கொண்டது. இந்த சிறப்பியல்புகள் மூலமாக உலகின் மிகப்பெரிய கடல் விமானங்களான ஜப்பான் நாட்டின் ShinMaywa US-2 மற்றும் ரஷ்யாவின் Beriev Be-200 விமானங்களை முந்தி உள்ளது.

ShinMaywa US-2.
Beriev Be-200.

AG600 விமானத்தை வடிவமைக்க பணியை கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கியது. 2014 ஆம் ஆண்டு இந்த விமானத்தின் முதல் புரோடோடைப் (Prototype) உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு முழு விமானமும் வடிவமைக்கப்பட்டது. 

ALSO READ  சீனா PPE-களை பதுக்கி வைத்து கொள்ளை லாபத்திற்கு விற்பதாக வெள்ளை மாளிகை குற்றச்சாட்டு.. 

அதன் பிறகு கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் குவாங்டோங் மாகாணத்திலுள்ள (Guangdong province) ஸூஹாய் (Zhuhai) நகரில் அமைந்துள்ள விமான நிலையத்தில் இதன் முதல் டேக் ஆப் மற்றும் லேண்டிங் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதன் பிறகு 10 மாதங்கள் கழித்து ஹூபே மாகாணத்திலுள்ள (Hubei province) ஜிங்மென் (Jingmen) நகரில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ஸாங்கே நீர்த்தேக்கத்தில் (Zhanghe Reservoir) டேக் ஆப் மட்டும் லேண்டிங் சோதனை நடைபெற்றது. அதன்பிறகு தற்போதுதான் முழுமையான நிலம் மற்றும் நீர் டேக் ஆப் மற்றும் லேண்டிங் சோதனை செய்யப்பட்டுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிரம்பின் பதிவை நீக்கிய பேஸ்புக்….எச்சரிக்கை விடுத்த டுவிட்டர்….

naveen santhakumar

“டேனிஷ் சித்திக்கை காப்பாற்றாமல் ஆப்கன் ராணுவம் விட்டுவிட்டது”- தலிபான் ராணுவத்தளபதி….

News Editor

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது

News Editor