உலகம்

ஹிட்லரின் முதலை என்று கூறப்பட்ட முதலை 84 வயதில் உயிரிழந்தது…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்கோ:-

இரண்டாம் உலகப் போரின் (WW II) போது பெர்லின் வெடிகுண்டு தாக்குதலில் தப்பிய சாட்டர்ன் (Saturn) என்ற 84 வயது முதலை மாஸ்கோவில் உயிரிழந்தது. இது அடால்ஃப் ஹிட்லரின் முதலை என்ற வதந்தி உலாவியது. 

இந்த மிஸ்ஸிஸிப்பி முதலையான (Mississippi Alligator) சாட்டர்ன் முதலை அமெரிக்காவில் பிறந்தது. பின்னர் பெர்லின் விலங்கியல் பூங்காவிற்கு (Berlin Zoo) 1936-ல் பரிசாக வழங்கப்பட்டது. 1943-ம் ஆண்டு இரண்டாம் உலக போரின் போது பெர்லினில் பிரிட்டிஷ் விமான படைகள் நடத்திய விமான தாக்குதலில் தப்பியது.

ALSO READ  பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு?

பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து பிரிட்டன் ராணுவ வீரரால் கண்டுபிடிக்கப்பட்டது. 

பின்னர் சோவிட் ரஷ்யாவிற்கு பரிசாக வழங்கப்பட்டது. மாஸ்கோ விலங்கியல் பூங்காவில் கிட்டத்தட்ட 74 ஆண்டுகள் பராமரிக்கப்பட்டு வந்தது. 

ALSO READ  நடுக்கடலில் சர்வதேச விமான நிலையத்தை சாத்தியப்படுத்தியது ஜப்பான்

மாஸ்கோ உயிரியல் பூங்காவில் நிர்வாகி ஒருவர் கூறுகையில் நாங்கள் குழந்தையாக இருக்கும்போது இலிருந்து இந்த முதலையை பார்த்து வருகிறோம். உண்மையில் இந்த முதலை ஒரு சரித்திர புகழ் வாய்ந்தது. தற்போது இதன் இறப்பு எங்களுக்கு பேரிழப்பாகும்.

இந்த சாட்டர்ன் முதலை ஹிட்லரின் வளர்ப்பு முதலை என்று வதந்தி பரவியது எப்படி?? எங்கிருந்து பரவியது?? என்றும் இதுவரை விடை கிடைக்கவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

3வது முறையாக திருமணத்தை ஒத்திவைத்த பிரதமர்!

naveen santhakumar

‘உங்களைப் பாதுகாப்பதன் மூலம் உங்கள் வீட்டை பாதுகாக்கலாம்’- ஜாக்கி சான்….

naveen santhakumar

அமெரிக்காவில் வன்முறையில் காந்தி சிலை அவமதிப்பு: மன்னிப்பு கோரிய தூதரகம்..

naveen santhakumar