உலகம்

தொழிலாளர்கள் நலனுக்காக….. இந்தியாவிற்கு அமெரிக்கா 15 கோடி நிதியுதவி:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மரபுசாரா தொழிலாளர்களின் நலனுக்காகவும் மற்றும் சிறு குறு தொழில்களின் மேம்பாட்டு நலனுக்காகவும் 15 கோடி ரூபாயை அமெரிக்கா இந்தியாவிற்கு வழங்குகிறது.

டெல்லியில் இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் கென்னீத் ஜஸ்டர் அவர் “கொரோனாவால் உலகமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த கடும் நோய்த் தொற்றால் சிறு மற்றும் குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மரபுசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

ALSO READ  அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு - தலிபான் அறிவிப்பு

சிறு மற்றும் குறு தொழில்களை மேம்படுத்தவும் மரபுசாரா தொழிலாளர்களின் நலனுக்காகாவும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க ஏஜென்சி இந்தியாவுக்கு நிதி உதவி செய்ய முடிவு செய்துள்ளது.மொத்தம் 15 கோடி ரூபாய் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் சிறு மற்றும் குறு தொழில்கள் மேம்படும். ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்”என்று கூறினார்.இது அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கூகுள் டிரைவ் செயலி ஆபத்தானதா???

naveen santhakumar

கால்பந்தாட்ட வீரரின் கழுத்தில் தாக்கிய மின்னல்…. பதைபதைக்கும் வீடியோ…

naveen santhakumar

இறந்த பின் சவப்பெட்டியில் எப்படி இருப்போம்? லண்டனில் உருவாகியுள்ள சவப்பெட்டி கிளப்….

naveen santhakumar