உலகம்

இந்தியாவின் மனிதாபிமானத்தை பாராட்டிய அமெரிக்கா :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

இந்தியாவில் கடந்த 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேநேரம் அண்டை நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் பல நாடுகளுக்கு நன்கொடையாகவும், மானியமாகவும் தடுப்பூசியை அளித்து வருகிறது.

அந்தவகையில் பூடான், மாலத்தீவுகள், நேபாளம், வங்காளதேசம், மொரீஷியஸ், மியான்மர், செசல்ஸ் ஆகிய நாடுகளுக்கு மானியமாக ஏற்றுமதி செய்துள்ள இந்தியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, பிரேசில், மொராக்கோ போன்ற நாடுகளுக்கு விரைவில் வர்த்தக ரீதியாகவும் ஏற்றுமதி செய்ய உள்ளது.

ALSO READ  50 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவுக்கு ஆப்பிள்களை ஏற்றுமதி செய்யும் இங்கிலாந்து :

இந்தியாவின் இந்த மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிரிவு தனது டுவிட்டர் தளத்தில், ‘தெற்கு ஆசிய நாடுகளுக்கு லட்சக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளை வழங்கி, உலக சுகாதாரத்தில் இந்தியா அளித்து வரும் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். ஒரு உண்மையான நண்பனாக, சர்வதேச சமூகத்துக்கு தனது மருத்துவ துறையை இந்தியா பயன்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டு உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த நபர்கள் பத்திரமாக மீட்பு…

naveen santhakumar

2050 ஆம் ஆண்டிற்குள் விவசாயத்திற்குரிய மேல்மட்ட மண் சுரண்டப்படும் அபாயம்

Admin

அமெரிக்க செய்தியாளர்கள் புத்தகத்தில் அதிபர் டிரம்ப் குறித்துஅதிர வைக்கும் தகவல்கள்

Admin