உலகம்

இப்படியும் ஒரு மருத்துவரா…!!!!!!!மருத்துவர் செய்த செயலால் பல ஆண்டுகள் தண்டனை :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்கா :

அமெரிக்காவில் நோயாளிகளுக்குத் தேவையற்ற அறுவை சிகிச்சைகள் செய்த குற்றத்திற்காக மருத்துவருக்கு 465 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணம், செசபீக்கைச் சேர்ந்த மருத்துவர் ஜாவித் பெர்வைஸ். மகளிர் மருத்துவ நிபுணரான இவர் கர்ப்பிணி நோயாளிகளைப் பிரசவ காலத்துக்கு முன்கூட்டியே வலியை தூண்டிவிட்டு  அறுவை சிகிச்சை  செய்துள்ளார்.

அதேபோன்று நிரந்தர கருத்தடைகளுக்கு 30 நாள் காத்திருப்பு காலங்களை மீறியுள்ளார். சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் புற்றுநோய் வராமல் இருக்க அறுவை சிகிச்சை அவசியம் எனக் கூறி அறுவை சிகிச்சை செய்ததோடு அவர்களிடம் இருந்து பணத்தையும் கறந்துள்ளார்.பெர்வைஸ் கடந்த 10 ஆண்டுக் காலத்தில், தன்னிடம் சிகிச்சை பெற்ற 41.26% நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார், ஆனால் ஒரு சராசரி மருத்துவர் வெறும் 7.63% நோயாளிகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சைகள் செய்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர் ஜாவித் பெர்வைஸ் தனது நோயாளிகளுக்கு மருத்துவ ரீதியாகத் தேவையற்ற அறுவை சிகிச்சைகள் செய்வதாக 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பல வழக்குகள் கருப்பை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பானவை.

ALSO READ  பழம்பெரும் நிறுவனத்தை 61 ஆயிரம் கோடிக்கு வாங்கிய அமேசான் !

இந்த தகவல் வெளிவந்த நிலையில் நோயாளிகள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இந்த வழக்கில் மருத்துவர் ஜாவித் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அவருக்கு 465 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது.அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் அவருக்கான அதிகாரபூர்வ தண்டனை விபரம் வெளியிடப்படவுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இத்தாலி தேசத்தில் ஒரு வாளிக்காக நடைபெற்ற சண்டையில் இரண்டாயிரம் பேர் உயிரிழப்பு… 

naveen santhakumar

இந்தியா தாக்குதல் நடத்தும் என்று கேட்டதும் கால்கள் நடுங்கியது-பாகிஸ்தான்

naveen santhakumar

துண்டிக்கப்பட்ட கையுடன் நிர்வாணமாக சாலையில் ஓடிய நபரால் பரபரப்பு:

naveen santhakumar