உலகம்

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்…கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தென்னாப்பிரிக்கா:

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண் கோசியம் தாமாரா சித்தோல்(37) இவரது கணவர் டெபோஹோ சோட்டெட்சி.  கர்ப்பமாக இருந்த சித்தோல்  பிரிட்டோரியா மருத்துவமனையில் சிசேரியன் மூலம் இவர் குழந்தைகளை பெற்றார். இவருக்கு மொத்தம் 10 குழந்தைகளாக 7 ஆண் குழந்தைகளும்  3 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. 

இது குறித்து சோட்டெட்சி கூறும் போது  நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் உணர்ச்சிவசப்படுகிறேன். என்னால் அதிகம் பேச முடியாது. தயவுசெய்து  மீண்டும் பேசலாம் என்று கூறினார்.சித்தோல், தனது கர்ப்பம் இயற்கையானது என்றும், அவர் கருவுறுதல் சிகிச்சை மூலம் குழந்தை  பெறவில்லை என்றும் கூறி உள்ளார்.சித்தோலின் 10-குழந்தை பிரசவம் உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. ஹலிமா சிஸ்ஸே என்ற பெண் கடந்த மாதம் மாலியாவில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

ALSO READ  தென்னாப்பிரிக்க அணி வீரர் அல்பி மோர்க்கல் பற்றிய ஒரு பார்வை….!!!

கின்னஸ் உலக சாதனை புத்தக செய்தித் தொடர்பாளர்  கூறும் போது சித்தோல் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற செய்தியை கின்னஸ் உலக சாதனை அறிந்திருக்கிறது, மேலும் நாங்கள் எங்கள் வாழ்த்துக்களை குடும்பத்தினருக்கும் அனுப்பி உள்ளோம். தற்போதைய நேரத்தில், தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு  முன்னுரிமை அளிப்பதால்  இதை நாங்கள் இன்னும் சரிபார்க்கவில்லை. ஒரு சிறப்பு ஆலோசகருடன் எங்கள் குழு இதைப் பற்றி ஆய்வு செய்யும் என்று கூறி உள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனோ பரவுவதை தடுக்க வித்தியாசமான ஐடியா…கார் டிரைவர் அசத்தல்..!!!

naveen santhakumar

மினி லிபெர்ட்டி: அமெரிக்காவுக்கு மீண்டும் சுதந்திர தேவி சிலை பரிசளித்த பிரான்ஸ்…!

naveen santhakumar

நான் அதிபராக இருக்கும் வரை தன்பாலின திருமணங்களுக்கு அனுமதி கிடையாது- புடின்.

naveen santhakumar