உலகம்

என்னே ஆச்சரியம்- 1,000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை உடையாமல் கண்டெடுப்பு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெருசலேம்:-

இஸ்ரேல் நாட்டில் 1000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை உடையாமல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள யவ்னே நகரில் நடந்து வரும் அகழ்வாய்வின் போது ஒரு கழிவுநீர் தொட்டியில் இருந்து கோழி முட்டையை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர்.

Israeli-archaeologists-find-unbroken-chicken-egg-that-is-almost-1000-years-old-See-viral-pics

கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளை கடந்த பின்னரும் கோழி முட்டை உடையாமல் இருப்பது அகழ்வாராய்ச்சியாளர்களையே பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே இதனை மிகவும் அரிதான கண்டுபிடிப்பு என அகழ்வாராய்ச்சியாளர்கள் விவரிக்கின்றனர்.

இந்த முட்டையை கண்டெடுத்த அகழ்வாராய்ச்சியாளர்களில் ஒருவர் இதுபற்றி கூறுகையில்,

ALSO READ  விண்வெளி சுற்றுலா; ஸ்பேஸ் எக்ஸ் கவுண்டவுன் ஸ்டார்ட்..!!

https://www.facebook.com/119789506085204/posts/645207543543395/

தென்கிழக்கு ஆசியாவில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோழிகள் வளர்க்கப்பட்டன, ஆனால் அவை மனித உணவில் நீண்ட காலத்திற்கு பிறகே சேர்க்கப்பட்டது. பெரும்பாலும், சேவல் சண்டை போன்ற பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன

முந்தைய காலங்களில் டோவிட், சிசோரியா மற்றும் அப்போலினயா போன்ற நகரங்களில் முட்டை துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் முட்டைகளின் உடையக்கூடிய தன்மை காரணமாக, உலக அளவில் கூட எந்த கோழி முட்டைகளும் இதுவரை பாதுகாக்கப்படவில்லை.‌ எனவே இது மிகவும் அரிதான கண்டுபிடிப்பு என கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லட்சுமணன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும்- பிரேசில் அதிபர்…

naveen santhakumar

திருடியவரிடமே பொருட்களை திருப்பி கொடுத்த திருடர்கள்… 

naveen santhakumar

பெய்ரூட்டில் பெருவெடிப்பு நடைபெற காரணமான அம்மோனியம் நைட்ரேட் எங்கிருந்து வந்தது???… 

naveen santhakumar