உலகம்

இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்தது ஆஸ்திரேலிய !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாட்டில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையும், உயிர்பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

இதனையடுத்து, இந்தியாவில் இருந்து தங்கள் நாடுகளுக்குள் கொரோனா பரவாமல் தடுக்க, குறிப்பாக புதிய வகை கொரோனா வைரஸ்கள் பரவல் தடுக்க, ஏற்கனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்குத் தடை விதித்துள்ளன.

தற்போது இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. மே 15 வரை இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகள் விமானத்திற்கும் ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து புதிய வகை கொரோனாக்கள் தங்கள் நாட்டில் பரவும் ஆபத்தை குறைக்கும் வகையில், இந்த தடை விதிக்கப்படுவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ALSO READ  1லட்சத்து 58ஆயிரம் அபராதம். சிங்கப்பூரில் தமிழருக்கு நேர்ந்த கதி
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவிடம் இருந்து வாங்கிய கருவிகள் எதுவும் வேலை செய்யவில்லை ஸ்பெயின்….

naveen santhakumar

நவாஸ் ஷெரீப் மருமகன் கைது:

naveen santhakumar

அடேங்கப்பா… உலக நாடுகளையே ஏமாற்றிய வங்கி ஊழியர்கள்

Admin