இந்தியா உலகம்

கொரோனாவை கட்டுப்படுத்த யோகியிடம் ஆலோசனை கேட்கும் ஆஸ்திரேலியா..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேன்பரா:-

ஆஸ்திரேலியாவின் ஆளும் லிபரல் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிரெய்க் கெல்லி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தங்கள் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த, ஆலோசனைகளை வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

Craig Kelly, yogi adityanath

உலகின் முன்னணி ஊடகங்கள் , கொரோனா இரண்டாவது அலையை இந்தியா கையாண்ட விதத்தை கடுமையாக விமர்சித்தன.

குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பிணங்கள் எரியூட்ட இடம் இல்லாமல், கங்கை ஆற்றுப் படுகைகளில் மிதக்கவிடப்பட்டது, எங்கு பார்த்தாலும் பிணங்கள் எரிந்தது என கடும் விமர்சனங்கள் எழுந்தது.

இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில், கொரோனா தொற்றை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கட்டுப்படுத்தியதை, ஆஸ்திரேலியா எம்.பி. கிரெய்க் கெல்லி வெகுவாக பாராட்டியுள்ளார்.

ALSO READ  ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி !

அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

இந்த பேரிடரை முறையாகக் கையாண்ட யோகி ஆதித்யநாத்திற்கு எனது வாழ்த்துகள். இதேபோல், எங்கள் நாட்டிற்கும் கொரோனாவை கட்டுப்படுத்த உதவ, முடிந்தால் நாங்கள் உங்கள் உதவியை பெற்றுக் கொள்வோம் எனத் தனது தெரிவித்திருந்தார்.

ALSO READ  இந்திய விளையாட்டு வீரர்கள் 35 பேருக்கு அர்ஜூனா விருது மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு

குறிப்பாக, யோகி அரசு, “ஐவர்மெக்டின்” மருந்தை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காகப் பயன்படுத்த அனுமதி அளித்ததைக் ஆஸ்திரேலிய எம்.பி. குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் “ஐவர்மெக்டின்” மருந்தைப் பரிசோதனைக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிக்கைகாக இதைப் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு..

naveen santhakumar

தாய்லாந்தில் அவசர நிலை பிரகடணம்:

naveen santhakumar

தாத்தா பிணத்தை பிரிட்ஜில் வைய்த்த பேரன்…கொலையா..???வறுமையா..???

Shobika