உலகம்

பிடனுக்கு சுளுக்கு….குணமடைய வாழ்த்து தெரிவித்த டிரம்ப்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன் :

அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பிடன், ஜனவரி 20-ம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக நிர்வாகப் பணிகளை தொடங்கி உள்ளார். தனது அமைச்சரவையில் இடம்பெறும் உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் பணியில் வருகிறார்.

இந்நிலையில் பிடன் சனிக்கிழமை தனது வீட்டில் அவரது செல்லப்பிராணியான நாயுடன் விளையாடியபோது அவருக்கு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதனால் நடக்க முடியாமல் சிரமப்பட்டார். இதனையடுத்து டெலாவரில் உள்ள எலும்பியல் சிகிச்சை மையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.மருத்துவமனையில் இருந்து அவர் வெளியே வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம், அவரது பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பு தொடர்பான புகைப்படம்  மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. 

ALSO READ  ட்ரம்ப் விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

பிடனுக்கு வலது காலில் சுளுக்கு ஏற்பட்டிருப்பதை அவரது மருத்துவர் கெவின் ஓ கென்னார் உறுதி செய்துள்ளார்.பிடனுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும், அதேசமயம் பல வாரங்களுக்கு நடைபயிற்சிக்கான பூட்ஸ் அணிய வேண்டியிருக்கும் என்றும் மருத்தவர் கூறி உள்ளார்.பிடன் விரைவில் குணமடைய வேண்டும் என அதிபர் டிரம்ப் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குவைத்தின் புதிய பட்டத்து இளவரசர்:

naveen santhakumar

சூப்பர் மார்க்கெட்டில் உணவுப் பொருட்களை நாக்கால் நக்கிய மர்ம நபர்கள் – ஏன் தெரியுமா?…

naveen santhakumar

ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமருக்கு கொரோனா….

naveen santhakumar