உலகம்

பிரேசிலை மிரட்டும் கொரோனா; ஒரே நாளில் 3 ஆயிரத்தை கடந்த உயிர்பலி !

சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்தவகையில் பிரேசில் நாட்டிலும் கொரோனாவின் இரண்டாவது அலையை  தீவிரமாக பரவி வருகிறது. 

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 3,668 பேர் கொரோனா  காரணமாக மரணமடைந்துள்ளார்கள். இதுவரை அந்நாட்டில் 1,26,64,058 பேர் மொத்தமாக  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 1,10,74,483 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்கள். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,17,936 ஆக இருக்கிறது. 12,71,639 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பிரேசிலில்  கொரோனா  பாதிப்பு அதிகமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related posts

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மந்திரி சபையில் இந்திய வம்சாவளியினருக்கு இடம் :

naveen santhakumar

சவுதியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு :

naveen santhakumar

ஜோ பைடனுக்கு கொரோனாவா????

naveen santhakumar