உலகம்

கரப்பான் பூச்சிக்கு பிரசவம்- வியக்க வைக்கும் வீடியோ

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரஷ்யாவில் கரப்பான் பூச்சி ஒன்றுக்கு மருத்துவர் பிரசவம் பார்த்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. செல்ல பிராணிகள் வளர்ப்பது யாருக்குத்தான் பிடிக்காது. சில சமயம் வித்தியாசமாக விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதையும் நாம் பார்த்துள்ளோம். இந்த வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண்ணொருவர் அர்சிமந்திரத்தா எனும் அரிய வகை கரப்பான் பூச்சியை தன் செல்லப் பிராணியாக வளர்த்து வந்துள்ளார்.

ஆனால் சில நாட்களாக கரப்பான் பூச்சியின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.கரப்பான் பூச்சியை பரிசோதித்த மருத்துவர்கள், அது கர்ப்பமாக இருந்ததாகவும், பிரசவத்திற்கான நேரம் வந்து விட்டதால் அதன் உடலில் மாற்றம் ஏற்பட்டதாகவும் கண்டுபிடித்தனர்.

மேலும் உடம்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இயற்கை முறையிலான பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக கரப்பான் பூச்சிக்கு மூன்று வகையான மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டு கரப்பான் பூச்சி வயிற்றிலிருந்து முட்டைகள் ஆபரேஷன் மூலமாக வெளியே எடுக்கப்பட்டன. இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்த மருத்துவர் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Russian vets successfully perform nano-surgery on cockroach that had pregnancy complications

MORE: https://t.co/LcWyowHeQY pic.twitter.com/zclHWEcf5Q— RT (@RT_com) December 27, 2019


Share
ALSO READ  2020 இறுதிவரை பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வார்கள்...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சூரியனின் மேற்பரப்பு இப்படித்தான் இருக்கும்.. முதல் முறையாக வெளியான புகைப்படம்

Admin

சர்வதேச விருது பெற்ற புகைப்படம் எது தெரியுமா???

naveen santhakumar

பரவி வரும் குரங்கு காய்ச்சல்.. மக்கள் பீதி!

Shanthi