உலகம்

அடுத்த அதிர்ச்சி: குழந்தைகளே அதிக அளவில் தாக்கும் ஒமைக்ரான் …

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தற்போது ஒட்டுமொத்த உலகையும் கவலையில் ஆழ்த்தியுள்ள தென் ஆப்ரிக்காவில் குழந்தைகளுக்கு ஒமைக்ரான் கொரானா திரிபு அதிக அளவில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இத்தொற்றால், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும், 15 முதல் 19 வயது வரை உள்ளவர்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவுக் கூறப்படுகிறது.

இது குறித்து தென் ஆப்பிரிக்கா தேசிய தொற்று நோயியல் மையத்தைச் சேர்ந்த டாக்டர் வாசிலா ஜசட் கூறுகையில்,

ALSO READ  கொரோனாவால் உயிரிழந்தால் 60 வயது வரை ஊதியம் வழங்கப்படும் !

கொரோனா முதல் இரண்டு அலையின் போது குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படவில்லை. 

அதனால் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு வரவில்லை. ஆனால் தற்போதைய ஒமைக்ரான் பரவலில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 15 – 19 வயதில் உள்ள இளம் வயதினரும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவது கவலை அளிக்கும் ஒன்றாக உள்ளது.

இதனால் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ALSO READ  ஒரே நாளில் ஒன்றரை லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. ஒரு சில வாரங்களில் அது குறித்த விபரங்கள் தெரியவரும் என்று கூறினார்.

மேலும், இந்த முறை குழந்தைகள், இளைஞர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணம் குறித்து ஆய்வு நடக்கிறது. தடுப்பூசி போடாதோர் மட்டுமின்றி தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஈரானில் பதவியேற்கும் விழாவில் அறை வாங்கிய கவர்னர்

News Editor

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா செல்ல நாளை முதல் தடை

Admin

‘எங்களுக்கு அதிக வரி விதியுங்கள்’- உலகக் கோடீஸ்வரர்களின் திடீர் கோரிக்கை!.. 

naveen santhakumar