சீனாவில் கொரோனா பரவல் புதிய உச்சம் தொட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்ய சீனா முடிவு செய்துள்ளது.
சீனாவில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவேக் தடுப்பூசியின் செயல் திறன் குறைவாகவே இருந்தது. ஆனாலும் பிற தடுப்பூசிகளை சீனா செலுத்தவில்லை. இந்நிலையில் கொரோனா பரவல் தற்போது புதிய உச்சம் தொட்டுள்ள நிலையில் குறிப்பாகத் தலைநகர் பெய்ஜிங்கில் நிலைமை ரொம்பவே மோசமாக உள்ளதால் பெய்ஜிங் சுகாதார மையங்களில் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை விநியோகம் செய்ய சீனா முடிவு செய்துள்ளது.

மேலும் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கும் வந்துவிட்ட சீனா கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியிருக்கிறது. இதனையடுத்து வரும் 8 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து சீனா வருபவர்கள் 5 நாட்கள் ஓட்டலிலும் 3 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதியை அமல்படுத்த சீனா முடிவெடுத்துள்ளது.