உலகம்

சீனா PPE-களை பதுக்கி வைத்து கொள்ளை லாபத்திற்கு விற்பதாக வெள்ளை மாளிகை குற்றச்சாட்டு.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக முகக் கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகள் அத்தியாவசியமானதாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்த முகக் கவசங்கள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை சீனா பதுக்கி வைத்து தற்பொழுது பல மடங்கு விலை உயர்த்தி அதனை விற்பனை செய்வதாக வெள்ளை மாளிகை குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் கூறியுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகையின் வர்த்தகம் மற்றும் உற்பத்தித் துறை இயக்குனர் பீட்டர் நவரோ (Peter Navarro) கூறுகையில்:-

உலகம் முழுவதும் இந்த பாதுகாப்பு உடைகள் மற்றும் முகவரி தங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை சீனாவினால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. குறிப்பாக இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் இந்த தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (Personal Protective Equipments (PPE)) பற்றாக்குறை ஏற்பட காரண சீனா அவற்றை பதுக்கி வைத்து உள்ளதால் தான்.

சீனா வைரஸ் பரவலை மறைக்க ஆரம்பித்து போதே உலகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு உடைகளை (PPE) தன் வசப்படுத்தியது. அப்பொழுது முதலே இந்த வேலையை தொடங்கி தற்பொழுது கொள்ளை லாபத்திற்கு விற்று வருகிறது.

ALSO READ  முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் முதல் பெண்மணி....

இது தொடர்பான ஆதாரங்கள் சீன அரசின் கலால் வரித் (Customs Duty Union) துறையின் அறிக்கைகளிலேயே உள்ளது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீன அரசாங்கம் 18 மடங்கு மாஸ்க்குகள் பாதுகாப்பு உடைகள் மற்றும் கையுறைகளை வாங்கி குவித்துள்ளது. தனியாக இரண்டு பில்லியன் மாஸ்க்குகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல பாதுகாப்பு கண்ணாடிகளையும் (Goggles) வாங்கி பதுக்கி வைத்துள்ளது.

ALSO READ  கொரோனா வைரஸை பரப்பியதற்காக, சீனாவிடம் நஷ்ட ஈடு கோரும் ஜெர்மனி...

தற்பொழுது இந்தியா, பிரேசில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு உடைகள், முகக் கவசங்கள், கையுறைகள் போன்றவற்றிக்கு தட்டுப்பாடு ஏற்பட காரணம் சீனா அவற்றை வாங்கி பதுக்கி வைத்து உள்ளதால் தான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க அரசின்  செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோரைத் தொடர்ந்து பீட்டர் நவரோவும் சீனாவை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் இந்த வைரஸை பரப்பியது சீனா என்றார்கள். நவரோ இந்த வைரஸை பரப்பியதன் மூலமாக சீனா கொள்ளை லாபம் பெறுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையேயான தூதரக உறவுகள் முடிவு:ஈரான்!

Admin

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் :

Shobika

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது தலிபான் படைகள் :

Shobika