உலகம்

இந்தியர்களுக்கு விசா வழங்க சீனா மறுப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பீஜிங்:

கொரானா தொற்று காரணமாக கடந்த 18 மாதங்களாக இந்தியர்களுக்கு சீனா விசா வழங்க மறுப்பது குறித்து சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி கருத்து தெரிவித்துள்ளார்.

First exclusive interview with India's new envoy to China - YouTube

சீனாவின் வூஹான் மாகாணத்தில் தான் முதன்முதலில் கொரானா தொற்று பரவத் தொடங்கியது. இதையடுத்து சீனாவில் தங்கிப் படித்து வந்த 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களும், நூற்றுக்கணக்கான தொழிலதிபர்களும், தொழிலாளர்களும் இந்தியா திரும்ப அனுப்பப்பட்டனர்.

இந்தியாவில் கொரானா தொற்று அதிகரிக்க தொடங்கியதைக் காரணம் காட்டி, இந்தியாவில் இருந்து சீனாவுக்கான விமான சேவையை சீனா அரசு தடை விதித்தது. அதுபோன்று இந்தியர்களுக்கு விசா வழங்குவதையும் சீனா நிறுத்தியது.

இந்நிலையில், இந்தியா – சீனா உறவுகள் தொடர்பான 4வது உயர்மட்ட பேச்சுவார்த்தை காணொளி மூலம் நடைபெற்றது. அதில், சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி கலந்து கொண்டார். இந்திய மாணவர்கள், தொழிலதிபர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் ஆகியோர் சீனாவுக்கு திரும்புவது இருதரப்பு தூதரக நிலைப்பாடு சாராத, மனிதாபிமான பிரச்னை என இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  பாகிஸ்தான் அரசு அதிரடி- தடுப்பூசி போடாதவர்களின் செல்போன் இணைப்பு துண்டிப்பு

இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கடந்த 18 மாதங்களாக இந்தியாவில் தவித்து வருகிறார்கள். தற்போதைய கருத்து வேறுபாடுகளை பொருட்படுத்தாமல், வர்த்தக உறவை இந்தியா தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

Sichuan University
School of International Studies of Sichuan University (SCU)

சீன தொழிலதிபர்கள் இந்தியா வர தொடர்ந்து விசா வழங்கப்படுகிறது. ஆனால் இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் சீனாவுக்கு மீண்டும் திரும்புவதற்கு உரிய எவ்வித நடடிக்கையும் மேற்கொள்ள மறுத்தது வருகிறது.

ALSO READ  கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஒட்டுமொத்த நாடும் சீல் வைக்கப்பட்டுள்ளது.....

சீனா நாட்டின் இந்த அணுகுமுறை என்பது அறிவியலுக்கு பொருந்தாத அணுகுமுறை என சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிதிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது – முதல்வர் ஸ்டாலின்

News Editor

கரப்பான் பூச்சிக்கு பிரசவம்- வியக்க வைக்கும் வீடியோ

Admin

உயிரியல் ஆய்வாளரும் மருத்துவத்துக்கான நோபல் வென்ற எலிசபெத் ஹெலன்

Admin