உலகம்

கொரோனா வைரஸ் ஆய்வகங்களில் உருவாக்கப்படவில்லை- சீனா .

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெய்ஜிங்:-

கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள எந்த ஒரு ஆய்வகத்தில் உருவாகவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளதாக சீன அரசாங்கம் கூறியுள்ளது.

இதுகுறித்து சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஸாவ் லிஜியன் (Zhao Lijian) :-

சீனாவின் வூஹான் நகரிலுள்ள ஆய்வகம் ஒன்றில் இருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முறை இந்த வைரஸ் எந்த ஒரு ஆய்வகத்திலும் உருவாக்கவில்லை என்று கூறிவருகிறது. மேலும் இது மனிதனால்  உருவாக்கப்பட்ட வைரஸ் அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸை சீனா வைரஸ் (C-virus) என்று முதன்முதலில் அழைத்தார். அதே போல உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அதோடு உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா அளித்துவந்த நிதியையும் நிறுத்தியுள்ளார்.

ALSO READ  தங்க சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களில் சிலர் பிணமாகவும்,உயிருடனும் மீட்பு

கடந்த புதன்கிழமை ட்ரம்ப் அளித்த பேட்டியில்:- 

இந்த கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்று கூறியிருந்தார்.

அமெரிக்க அரசின் செயலாளர் மைக் பாப்பியோ (Mike Pompeo) கூறுகையில்:’

ALSO READ  மக்களுக்கு இலவச ரயில் பயணம்!

இந்த வைரஸ் சீனாவின் வூஹான் நகரில் இருந்து தான் உலகம் முழுவதும் தற்போது பரவி உள்ளது. எனவே சீன அரசாங்கம் தான் இந்த வைரஸ் எவ்வாறு தோன்றியது, வூஹான் நகரில் எப்படி பரவி என்பதை விளக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த கொரோனா வைரஸ் வவ்வால் மூலமாக பரவியது என்று கூறப்படுகிறது. சீனாவின் வூஹான் ஆய்வகத்தில்  பணியாற்றிய ஆய்வாளர் ஒருவருக்கு (Zero Patient) முதலில் பரவியதாகவும் அவர் மூலமாக ஹுவானான் (Huanan) கடல்உணவு சந்தையில் உள்ளவர்களுக்கு பரவியது என்றும்  நிரூபிக்கப்படாத (Unproven) தகவல்கள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகில் 10.54 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு !

News Editor

ஃபேஸ்புக் நிறுவனம் மீது அமெரிக்கா வழக்கு:

naveen santhakumar

13 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு சிறுவன் காரணமா?

Admin