உலகம்

ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அதிக வேகத்தில் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஏவி சீனா பரிசோதனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெய்ஜிங்

சீனா தனது புதிய கண்டுபிடிப்பான ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ரகசியமாக பரிசோதனை செய்துள்ளதாக இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் தி பினான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

China tested n-capable hypersonic missile in August: report | World  News,The Indian Express

கன நேரத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும், அணுஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பல நாடுகள் ரகசியமாக உருவாக்கி சோதித்து வருகின்றன. இந்தியா விஞ்ஞானிகளும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் தகவலுக்கு வெளியாகி உள்ளது.

ALSO READ  இந்தியா தான் இதில் முதல் இடமாம்…..எதில்??????....

ராக்கெட், ஏவுகணை உள்ளிட்ட எந்த ஆயுதமாக இருந்தாலும், அதை கண்ணிமைக்கும் நேரத்தில் தடுத்து வானிலேயே அழிக்கும் தடுப்பு தொழில்நுட்பங்கள் ஏராளம் வந்து விட்டன.

China tests new space capability with hypersonic missile - Nikkei Asia

ஆனால் கன நேரத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயக் கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வானிலேயே தடுத்து அழிக்கும் தொழில்நுட்பங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஹைப்பர்சோனிக் ஏவுகணை அணுசக்தியுடன் தாக்கக் கூடியதும் , தடுக்க முடியாத ஏவுகணை என்பதால் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மிகுந்த ஆபத்தானவைகளாக உள்ளது என அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தெரிவித்துள்ளன.

ALSO READ  32வது ஒலிம்பிக்ஸ் போட்டிகள்; டோக்கியோவில் கோலாகல தொடக்கம்…!
China tests three types of hypersonic aircraft missiles at the same time-  Technology News, Firstpost

சீனா நடத்திய இந்த ரகசிய சோதனை மிகவும் கவலைதரக் கூடியது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது பேட்டியில் வெளிப்படையாகவே கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு …..

naveen santhakumar

லைவ் டெலிகாஸ்டின் போது செய்திவாசிப்பவரின் பல் விழுந்தது- அவர் நடந்து கொண்ட செயல் சமூக வலைதளங்களில் வைரல்…

naveen santhakumar

சொந்த கணவரை மீண்டும் திருமணம் செய்த பெண் – எதற்கு தெரியுமா?

Admin