உலகம்

உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகின் பணக்கார நாடுகள் குறித்து மெக்கின்சி (McKinsey & Co) நிறுவனம் நடத்திய ஆய்வில் சீனா முதலிடத்தைப் பெற்றுள்ளது

China surpasses US to grab top spot in list of wealthiest countries | True  Scoop

உலகின் முதல் பொருளாதார நாடாக அமெரிக்கா தொடர்ந்து இருந்து வந்தது. கடந்த இருபது ஆண்டுகளில் உலகின் சொத்து மதிப்பானது மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இந்த ஆய்வானது உலகின் 60% வருமானத்தை வைத்திருக்கும் நாடுகளின் இருப்பு நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதனடிப்படையில் கடந்த 2000ம் ஆண்டில் 156 டிரில்லியன் டாலராக இருந்த மொத்த பொருளாதார நிகர மதிப்பானது, 2020ல் 514 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

ALSO READ  டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ XT O வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் :
Is China Bigger Than the United States? - WorldAtlas

இதில் சீனாவின் பங்கு தான் மிக அதிகமாக உள்ளதாக மெக்கின்சி நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. உலகின் மொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கினை சீனா வைத்துள்ளது. சீனாவின் பொருளாதார மதிப்பு மட்டும் 120 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Top 10 Richest Countries in the World in 2021 - Financesonline.com

உலக பணக்கார நாடுகள் பட்டியலில் இதுவரையில் முதலாவதாக இருந்து வந்த அமெரிக்கா தற்போது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் ஜெர்மனியும், அடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்ஸிகோ, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளும் இடம்பெற்றுள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

540 டிகிரி கோணத்தில் நகர்ந்த சர்வதேச விண்வெளி நிலையம்

News Editor

அமெரிக்காவில் கலவரம்: ஜார்ஜ் பிளாயட் கொலையை வீடியோ எடுத்த 17 வயது சிறுமி…

naveen santhakumar

கொரோனா அதிகரிப்பு: குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்.. அதிரடி அறிவிப்பு!

naveen santhakumar